Thursday, July 27, 2006

என்னைப் பற்றி...

என் பெயர் முகம்மது மாஹிர். சென்னையில் நிறுவனம் ஒன்றில் இணைய மென்பொருள் வல்லுநராக (Web Developer) பணியாற்றி வருகிறேன். எனக்கு தெரிந்த இணைய நுட்பங்களை அழகு தமிழில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த ப்ளாக் திறந்திருக்கிறேன்.

இந்த பக்கத்தில் HTML, CSS, Javascript, DHTML, PHP, ASP, ASP.Net, AJAX, ATLAS(Dot Net), MYSQL, SQL Server நுட்பங்களிலிருந்து எளிமையானது முதல் கடினமானது வரை எழுத எண்ணியுள்ளேன்.

மேலும் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களின் செய்திகளும், நுட்பங்களும் கூட எழுதலாமென்றிருக்கிறேன்.

இதை தமிழில் எழுத காரணம் மென்பொருளில் தேர்ச்சிபெறாத/அதைப்பற்றி தெரியாத தமிழ் ஆர்வலர்கள் அதிகம் பயனிக்க தொடங்கியுள்ள நிலையில் இது போன்ற இணைய பக்கங்கள் தொடங்கினால் பயனளிக்குமே என்கிற எண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களை ஆங்கிலத்திலோ தமிழிலோ எனக்கு மின்னஞசலிடலாம் (mahir78[at]gmail[dot].com)

5 Comments:

At 7/29/2006 2:01 PM, Blogger சந்திப்பு said...

முகம்மது மாஹிர்

தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

தமிழை பற்றி எவ்வளவுதான் வாய் கிழிய பேசினாலும், அது அறிவியல் மொழியாகாத வரை அது முழுமையான மொழியாகது. எந்த விஷயத்தை தமிழில் கொடுப்பதற்கு உரிய மொழி தமிழ். அந்த அடிப்படையில், அதுவும் கணிணித் தொடர்பான விஷயங்கள் - நுட்பங்கள் எல்லாம் வியாபாரமயமாகி வரும் சூழலில் இலசமாக தங்களது அறிவை பகிர்ந்து கொள்ள முன்வந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடருங்கள் உங்கள் பயனத்தை.

 
At 7/29/2006 2:15 PM, Blogger மலைநாடான் said...

வணக்கம் மாஹிர்!

தங்கள் பணியை பாராட்டி வரவேற்கின்றேன்

நன்றி!

 
At 7/30/2006 3:39 PM, Blogger suvanappiriyan said...

தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

-suvanappiriyan

 
At 7/30/2006 9:54 PM, Blogger அறிஞர். அ said...

உங்களுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.

நன்றி.

அத்துடன் இந்த சிறியவனுக்கு அடிக்கடி உங்கள் ஆலோசனைகளை தர மறவாதீர்கள்.

 
At 8/09/2006 8:10 PM, Anonymous Anonymous said...

thangal pani sirakka vazhthugal.

=kani

 

Post a Comment

<< Home