Friday, July 28, 2006

ஏமாற்று வேலை (FAJAX)

இந்த வலைப்பூவின் பக்கத்தின் உள் செல்லும் பொழுது அனிமேசனுடன் நன்றாய் இருக்கிறதே. எப்படி?

இது நுண்ணிய மென்மையான நிறுவனத்தின் DirectX நுட்பத்தின் உதவிக் கொண்டு உருவாக்கப்பட்டது. AJAX(Asynchronous Javascript and XML) போன்றே வேகமாக செயல்படுவதால் FAJAX (FAKE AJAX) என்று சொல்லப்படுகிறது (AJAX பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்). இது நுண்ணிய மென்மையான நிறுவன உலாவிகளில் மட்டும் இயங்கக்கூடியது.
 
எவ்வாறு செயல்படுகிறது:
 
இணைய பக்கம் செர்வருக்கு சென்று வரும் போது ஏற்படும் சிமிட்டலை (flicker) குறைக்கிறது. அதாவது IE, இணைய பக்கத்தை படமாக்கி இன்-மெமரியில் சேமித்து வைத்துக்கொள்கிறது, பின்னர் வரும்பொழுது DirectX மூலம் பழையதை எடுத்து Smooth ஆக மற்றொரு படமாக்கி தருகிறது.
 
எவ்வாறு செய்வது:
1. உங்கள் இணைய பக்கத்தின் Source Code ற்கு செல்லுங்கள்.
2. "head" என்பதை தேடுங்கள்.
3. "head" அடுத்தவரியில் கீழே உள்ள வரியை இணையுங்கள்.
4. duration கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.
<meta http-equiv="Page-Exit" content="progid:DXImageTransform.Microsoft.Fade(duration=.5)"/>
<meta http-equiv="Page-Enter" content="progid:DXImageTransform.Microsoft.Fade(duration=.5)"/>

உதவி பக்கம்:
1. http://msdn.microsoft.com/library/default.asp?url=/workshop/author/filter/reference/filters/basicimage.asp 2. http://www.jansfreeware.com/articles/ie-page-transitions.html
குறைபாடு:
 
IE தவிர மற்ற உலாவிகளில் செயல்படாது.
 
 
குறிப்பு: "நுண்ணிய மென்மையான=MICRO SOFT, சரியான  பொருள் தானே. அடிக்க வந்துடாதீங்க...

6 Comments:

At 7/29/2006 2:06 PM, Blogger சந்திப்பு said...

I have a question. So, I want your Email ID.

Thanks
Selvaperumal

 
At 7/31/2006 9:09 AM, Blogger Boston Bala said...

Thanks for the tip

 
At 8/08/2006 5:56 PM, Anonymous Anonymous said...

அன்புள்ள திரு. மாஹிர்,

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 5.5 பொதிப்பில் இருந்துதான் DXImageTransformக்கு ஒப்பிசைவு இருப்பதால் அதற்கு கீழுள்ள IE பொதிப்புகளில் இது பயனளிக்காது இல்லையா? என்னிடம் விண்டோஸ் 98 இல்லாததால் நானும் DXImageTransformஐ அதில் சோதித்துப் பார்த்ததில்லை.

இப்பொழுதெல்லாம் 6ஆம் பொதிப்புக்குக் குறைவான IE யார் பயன்படுத்துகிறார்கள் என்கிறீர்களா? அதுவும் சரிதான். ;-)

எனவே fadingக்கான நீங்களும் அறிந்திருக்கக்கூடிய பழைய வழி ஒன்றையும் இங்கேயே சும்மா பதிந்து வைக்கிறேன்.

< META http-equiv="Page-Enter" CONTENT="RevealTrans(Duration=4,Transition=0)"> என்ற tag இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 4.0 பொதிப்பிலிருந்தே செயல்படும்.

RevealTrans என்பதின் பிறகு இருக்கும் Durationன் மதிப்பு நான்கில் இருந்து தொடங்கி 12 வரை இருக்கலாம். எவ்வளவு மெதுவாக fade ஆகும் என்பதை இந்த பண்பு குறிக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான மதிப்பு இருக்கிறதோ, அவ்வளவு மெதுவாகவும் நன்றாகவும் இருக்கும் பார்ப்பதற்கு. இரண்டாவதாக வரும் Transition எந்த வகையான fade என்பதைக் குறிக்கப் பயன்படுகிறது. அது 0ல் இருந்து 23 வரை இருக்கலாம். ஒவ்வொரு எண்ணுக்கான transition வகையும் சுருக்கமாக:


0 - Box in
1 - Box out
2 - Circle in
3 - Circle out
4 - Wipe up
5 - Wipe down
6 - Wipe right
7 - Wipe left
8 - Vertical blinds
9 - Horizontal blinds
10 - Checkerboard across
11 - Checkerboard down
12 - Random dissolve
13 - Split vertical in
14 - Split vertical out
15 - Split horizontal in
16 - Split horizontal out
17 - Strips left down
18 - Strips left up
19 - Strips right down
20 - Strips right up
21 - Random bars horizontal
22 - Random bars vertical
23 - Random


அப்புறம் மாஹிர், உங்கள் மின்னஞ்சல் ஒரு எண்ணும் சேர்ந்துள்லதே? அது நீங்கள் பிறந்த ஆண்டா? ;-)

அப்படி என்றால் நம் இருவருக்கும் ஒரே வயது. :-)

க்ருபா

 
At 8/09/2006 7:42 AM, Blogger அறிஞர். அ said...

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்.

//அப்புறம் மாஹிர், உங்கள் மின்னஞ்சல் ஒரு எண்ணும் சேர்ந்துள்ளதே? அது நீங்கள் பிறந்த ஆண்டா? ;-)//

அட நண்பரே சரியாக கண்டுபிடித்துவிட்டீரே! இதெல்லாம் இரகசியமாக அல்லவா கேட்கவேண்டும்.

 
At 8/09/2006 12:06 PM, Anonymous Anonymous said...

நாம் ஒன்றும் நம் வயதைப் பற்றி பேசவில்லையே, பிறந்த ஆண்டைப் பற்றிதானே பேசுகிறோம்? ;-)

சரி சரி. இதனால் சகலமாணவர்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், 'பேச்சு'லர் மாஹிருக்கு சுத்துவட்டம் பதினெட்டுப் பட்டியிலுள்ள பெண்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிக்கு,
'பேச்சி'லர் க்ருபா

 
At 8/10/2006 4:18 PM, Blogger அறிஞர். அ said...

அட! என் அருமை நண்ப!!

நணபர்களே இப்படித்தான், இடம், பொருள், ஏ(வாள்)வல் எல்லாம் பார்ப்பதில்லை.

 

Post a Comment

<< Home