Sunday, July 30, 2006

கூகில் கேட்ஜட்

அது என்ன கூகில் கேட்ஜட்:

கூகில் டெஸ்க்டாப் தேடுதலின் அங்கமான, டெஸ்க்டாப்களில் இயங்கக்கூடிய லைட்வெயிட் மென்பொருட்களின் தொகுப்புகளே கூகில் கேட்ஜட் ஆகும். அதிகமாக இவை இணையத்தை சார்ந்தே இருக்கின்றன. இணையம் சாராமலும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

உதாரணமாக,

1. இணையம் இல்லாமல் சொடக்கு போன்ற விளையாட்டுகள் (ஜாவாஸ்கிரிப்ட் உதவி கொண்டு உருவாக்கப்படுகின்றன).
2. இணையம் சார்ந்தவையென்றால், கிரிக்கெட் ஸ்கோர் முதல் உங்களுடைய இணையதளத்திலிருந்து நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு கொடுக்க விரும்பும் இணைய சேவைகள்,
3.ஒரிரு வரி சுடச்சுட செய்திகள்,
4.திருக்குறள் வசனம் முதல் சீரிய சிந்தனை வரிகள் வரை.
5. "தமிழ்மணத்தில் இன்று" போன்ற செய்திகள், இப்படி பல....

வாசகர்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் இணையதளங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அவை தானாகவோ அல்லது பட்டன் சொடுக்குவதன் மூலமோ வாசகர்களின் கணிணிக்கே சென்றடைய செய்யலாம்.

உருவாக்கும் விதம்:
Basic:

கூகில் கேட்ஜட் உருவாக்குவது மிகவும் சுலபம். ஐந்தே நிமிடங்களில் சிறிய கேட்ஜட்டை நீங்கள் உருவாக்கிடலாம். தேவை கொஞ்சம் ஜாவாஸ்கிர்ப்ட் அறிவு அத்துடன் asp, php,aspx அறிவு இருந்தால் இன்னும் டேட்டாபேஸ் போன்றவற்றுடன் இணைத்து கொடுக்கலாம். photoshop டிசைனிங்கும் கைகொடுக்கும்.

மற்றவைகளை Gadget Designer உருவாக்கி தந்து விடும். (View.xml என்றொரு ஃபைல் இருக்கும் பார்த்து xml தெரியாதவர்கள் பயந்துவிட வேண்டாம். அவ்வளவு கடினம் இல்லை)

Advanced:

நீங்கள் விரும்பிய ப்ரோக்ராமிங் கருவியை கொண்டே உருவாக்கலாம் உதா. MS Visual Studio 6.0

அஜாக்ஸ் உபயோகிப்பதாய் இருந்தால் கூகில் Google Ajax API தான் உபயோகப்படுத்தவேண்டுமென்றில்லை. கீழே உள்ள கோடிங்கை கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

function fn_ajax(a){
//alert("here")
try{
req=new ActiveXObject("Msxml2.XMLHTTP");
}
catch(e){
try{
req=new ActiveXObject("Microsoft.XMLHTTP");
}
catch(oc){
try{
req = new XMLHttpRequest();
}
catch(oe){
req=null;
}
}
}
//alert(c)
if(!req&&typeof XMLHttpRequest!="undefined"){
req=new XMLHttpRequest();
}
if(req!=null){
//url=" http://yourwebsite/yourfile.asp?q="+a
//url=" http://yourwebsite/yourfile.asp"
//url=" http://yourwebsite/yourfile.php"
url="http://yourwebsite/yourfile.txt"
//alert(url)
req.open("POST",url,true);
req.onreadystatechange=function(){
if(req.readyState ==4){
if(req.status==200){
if(req.responseText!=""){
label_id.innerText=req.responseText ;
}
}
}
req.send(null);
}

}

fn_ajax(a),a-பேராமீட்டரில் உங்களுக்கு தேவையான எண்களையோ குறிச்சொற்களையோ அனுப்பி தேவைப்படும் விவரத்தை டேட்டாபேஸிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

req.responseText என்பது url ல் நீங்கள் கொடுத்த முகவரி ஃபைல் களான yourfile.asp/php/txt லிருந்து response.write, echo அல்லது Text களாக உங்களுக்கு கிடைத்த output.

label_id என்பது நீங்கள் output ஐ பிரிண்ட் செய்யப்போகும் இடம். அதாவது <label id="label_id" />"


கூகில் கேட்ஜட் போட்டி முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ளது. 5000$ வரை பரிசு உண்டு, முயற்சி செய்யுங்கள்.

இணைய முகவரி:http://www.desktop.google.com

ஆறு (கோடி) தமிழர்களும் ஒண்ணா கேக்காங்க "உங்க மென்பொருள் கூகில் கேட்ஜட்டில் எப்போ அரியனை ஏறப்போகுது!?"