முதலை ஆர்வலர் இர்வின் மரணம்

அவருக்கு இரு குழந்தைகள், மனைவி உண்டு. அவரைப்போலவே, அவருடைய மனைவியும் முதலைகளை பராமரிப்பவர். ஸ்டீவ் இர்வினுடைய தந்தையும் தாயும் கற்றுக்கொடுத்ததுதான் இந்த முதலை விளையாட்டும் பராமரிப்பும். 8 வயதிலே களத்தில் இறங்கியிருந்திருக்கிறார். 44 வயதில் இறந்த அவர் வெளியுலகிற்கு அறிமுகமானது அவருடைய நண்பர் 1990ல் எடுத்த வீடியோ கோப்புகள் மூலமே.
ஆஸ்ட்ரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசித்துவந்த அவர் அங்குள்ள முதலைப்பண்ணையில் பணியாற்றினார்.
தலைவர்களின் அஞ்சலி:
பிரதமர் ஜான் ஹோவர்ட், மிகுந்த அதிர்ச்சியும் அடைந்ததாகவும், இலட்சக்கணக்கானோருக்கு உற்சாகத்தைக் கொடுத்த அவர் ஆஸ்திரேலியர்களில் வித்தியாசமானவர், நல்குணங்களை கொண்டிருந்த அவரின் இழப்பு ஆஸ்திரேலியாவிற்கு பேரிழப்பாகும் என்று அஞ்சலியும், புகழாரமும் சூட்டியுள்ளார்
சென்ற கிருஸ்த்துமஸில் ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்காவில் அவருடன் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் அலக்சாண்டர் டவ்னர் கூறுகையில், "இர்வினின் உழைப்பு வெளிநாட்டவர்களின் வருகையை அதிகரிக்கச்செய்ததாக தெரிவித்தார்".
அவருடைய மரணம் ஆஸ்திரேலிய சுற்றுலாத்துரையின் வளர்ச்சியில் பின்னடைவு என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எப்படி இறந்தார்?
stingrays

படத்தில் உள்ள உயிரனமான இவைதான் இர்வினை தாக்கியது. நெஞ்சில் துளையிட்டு இதயத்தை குத்தியது. பொதுவாக stingrays கள் தானாக தாக்குவதில்லை, தற்காப்புக்குத்தான் தாக்குகின்றன என ஒரு ஆராய்ச்சி தளம் தெரிவிக்கிறது.
stingrays களின் குடும்ப வகைகளின் படங்கள்:

(அட நம்ம ஊர்களில் "திருக்க(திருக்கை?) மீன்" என்று சொல்வோமே அந்த வகை தானோ இது?,)
அதைரியசாலி, விலங்கியல் ஆர்வலரான அவருடைய துரதிருஷ்ட மரணம் நம் நெஞ்சையும் துளைக்கிறதுதானே?
News from AOL
4 Comments:
நான் விலங்கியல் நிகழ்ச்சிகளில் ஓர் அவுஸ்ரேலியரைப் பார்த்துள்ளேன். நீங்கள் அவரைத்தான் குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை. அவர் DHL விளம்பரத்திலும் நடித்துள்ளார்.அவரானாலும் இது பேரிழப்பே! நாம் சோபாவில் இருந்து விலங்குலகைப் பார்க்க எவ்வளவோ ஆபத்துகளைச் சந்திப்பவர்கள். அவர் குடும்பதினர் ஆறுதலடையப் பிராத்திக்கிறேன். அவர் பெயரை ஆங்கில எழுத்தில் இட்டால் நான் இணையத்தில் படம் பார்ப்பேன்.
யோகன் பாரிஸ்
மாஹீர்!
நான் நினைத்தவரும் இவர்தான்; இப்போ உங்கள் பதிவில் அவர் படம் வந்தது. ஓர் விலங்கியல் நிபுணர்; பேரிழப்பே!!இவர் எத்தனையோ விவரணச்சித்திரங்கள் நசனல் யியோகிறபி;டிஸ்கவரிக்குச் செய்துள்ளார்.
யோகன் பாரிஸ்
மாஹிர், நன்றி அந்தத் தகவலுக்கு.
விக்கிபீடியாவில் கட்டுரை இணைத்துள்ளேன்.
விக்கிபீடியா
Dear johan and kanags,
Thanks for your comments.
I visited Wiki, good...i will contribute when time permits.
Post a Comment
<< Home