Friday, July 13, 2007

குறிச்சொல் மேகம் உருவாக்கும் கருவி

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் குறிச்சொல் இட்டு தலைப்புகள் எழுதியிருப்பீர்கள். அவற்றில் குறிப்பிட்ட குறிச்சொல்லின் கீழ் அதிகமான கட்டுரைகள் எழுதியிருப்பீர்கள். நீங்கள் எப்பிரிவின் கீழ் அதிகம் எழுதியிருக்கிறீர்கள் என்பது எண்களை வைத்து சொல்வதைவிட அதன் வார்த்தையின் தடிமானத்தை (font size) வைத்து சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம்.

இவற்றை உருவாக்க பிரபல்யமான தளங்கள் இருக்கின்றன. ஆனால் அவைகளில் தமிழ் எழுத்துருக்கள் சரிவர தெரிவதில்லை.

கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் பெயரை கொடுத்து உருவாக்கிக்கொள்ளலாம்.

இந்த குறிச்சொல் மேகத்தின் சிறப்பு, பக்கம் பிரிப்பதுதான் (page navigation) அதுவும் client sideல் செய்வதால் அதிவேகமாக அடுத்த பக்கத்தை பார்க்கமுடியும். அடுத்த பக்கத்திற்கு செல்ல server க்கு செல்லாது.

முகவரி:
http://techtamil.in/tagcloud




இவை சற்று மிக வேகமாக செயல்படக்கூடியது.

Noted Bugs/expected features:
1. URL with ending / will not get the page as http://techtamil.in/tagcloud/
2. Box Border color cannot have hexadecimal values with #

மேலும்: I have a post on JSON and Client side Navigation and how i created & implemented in this program at my never used blog http://madbygoogle.blogspot.com

குறிப்பு:
ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை இருக்கும். ஹிஹி...தவறான குறிச்சொற்களைச் சொன்னேங்க...அப்படி நீங்கள் கண்டால் தயவுசெய்து அறியத்தாருங்கள்.


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 3.0 License.

Labels:

2 Comments:

At 7/14/2007 11:11 AM, Blogger விருபா - Viruba said...

வணக்கம் மாஹிர்,

உங்களுடைய குறிச்சொல் மேகத்தை எங்கள் வலைப்பதிவில் இணைத்துள்ளோம், ஆனால் ஏதோ குளறுபடி என்று நினைக்கிறேன் object not found என்று வருகிறது.

தமிழ் 99 ஆதரவு banner இற்குக் கீழே பார்க்கவும்

 
At 7/14/2007 11:19 AM, Blogger அறிஞர். அ said...

நன்றி விருபா,

(தற்காலிகமாக )புள்ளியை நீக்கிவிட்டு முயற்சிக்கவும்..

viruba.blogspot.com என்பதற்கு பதிலாக வெறும் viruba என்று மட்டும் கொடுங்கள்..

<iframe src="http://techtamil.in/tagcloud/viruba?boxbordercolor=blue&boxwidth=150&pagelimit=18&op=iframe" width="150" height="auto" scrolling="no" frameborder="0" allowtransparency="true"></iframe>

 

Post a Comment

<< Home