நடந்து முடிந்த விக்கி முகாம்
சென்ற ஞாயிறு அன்று டைடல் பூங்காவில் நடைபெற்ற விக்கி முகாம் பற்றிய சிறு தொகுப்பு
1. Knowledge Foundation என்கிற இலாப நோக்கமற்ற அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த முகாம் இந்த அமைப்புக்கு Blogcamp, proto வை தொடர்ந்து மூன்றாவது முகாம்.
2. சிறப்பு விருந்தினராக/அழைப்பாளராக விக்கிபீடியாவை உருவாக்கிய திரு ஜிம்போ வேல்ஸ் கலந்து கொண்டார்.
3. ஜிம்போ சுமார் 2 மணிநேரம் விக்கிபீடியாவை உருவாக்கிய விதம், வளர்ச்சி, நோக்கம், விக்கிபீடியா மீது மறைமுக /நேர் தாக்குதல், போன்றவற்றை பற்றி விளக்கினார்.
4. புதிதாக உருவாக்கிவரும் விக்கியா (wikia - விக்கி ஆசாரி என்று படித்ததாக ஞாபகம்) பற்றி, (கூகிள், எம்.எஸ்.என், யாகூ போன்றவற்றிற்கு போட்டியாக திறந்த மூலம்), தேடுபொறி பற்றிய தன் எண்ணங்களை எடுத்துரைத்தார். இது அல்கோரிதமும் திறந்தமூலத்தில் கிடைக்கும்.
5. விக்கிமீடியா ஃபவுண்டேசன் என்பது இலாப நோக்கமற்ற அமைப்பு அதேவேலையில் விக்கியா என்பது இலாபம் ஈட்டக்கூடிய அமைப்பு, அதன் வருமானம் விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று விளக்கினார்.
6. விக்கி ஆர்வலர்கள் கேட்ட சரமாரி கேள்விகளுக்கு பலமணிநேரம் சடைக்காமல் பதிலளித்தார்.விக்கிபீடியா பற்றி பல்வேறு தலைப்புகளில் நிபுனத்துவம் வாய்ந்தவர்கள் விளக்கினர்.
தமிழ் விக்கிபீடியா சார்பில் அதன் மேலாளர்கள் திரு சுந்தர் மற்றும் திரு கணேஷ் கலந்து கொண்டு, செய்தியாளர்களுக்கு/விக்கிபீடியர்களுக்கு தமிழ் விக்கிபீடியா, அதன் வளர்ச்சி பற்றி விளக்கினர்.
தமிழ் விக்கிபீடியா / விக்சனரி கருவிப்பட்டை வலைப்பூக்களில்/ இணையதளங்களில் பொருத்துவது குறித்தும், கூகிள் சாட்டில் விக்சனரி / விக்கிபீடியாவிற்கான தொடுப்புகள் பெறுவது எப்படி என்பது குறித்த தமிழூற்று காட்சியளிப்பை காட்டினேன்.
காட்சியளிப்பு (powerpoint presentation) பெற இங்கே சொடுக்கவும்.
3 Comments:
உங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி மாஹிர்.
-மதி
நன்றி.விக்கி ஆங்கிலப் பதிவில் தமிழ் மொழி வரலாறு பற்றி எழுதியிருப்பது யாரோ தமிழ் பிடிக்காதவர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
தயவு செய்து அதை மாற்றி எழுதத் தெரிந்த நண்பர்கள் மாற்றி எழுதுவது நலம்.
பல தமிழ்ப் பதிவுகளையும் நண்பர்கள் பார்க்கவேண்டியது அவசியம்.மாற்ற வேண்டியவற்றை எப்படி மாற்றுவது என்பதைச் சொன்னால் ப லரும் செய்யலாம்.
வருகைக்கு நன்றி மதி...
தமிழன் என்கிற பெயர் வைத்திருக்கிற நீங்களும் அந்த கட்டுரையை மேம்படுத்தலாமே?
Post a Comment
<< Home