Tuesday, July 31, 2007

அரை மணிநேரத்தில் வருமானவரி தாக்கல்...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று (31/07/2007) வெற்றி கரமாக நான் தாக்கல் செய்துவிட்டேன்...
0. http://www.incometaxindiaefiling.gov.in/portal/index.jsp செல்லவும்.
1. நீங்கள் சம்பள ஊழியராக இருப்பின் ITR-1 பாரத்தை தேர்ந்தெடுக்கவும். இதற்கு மற்ற எந்த ஆவணங்களும்(உதா. பாரம் 16, 16அ ) தேவையில்லை.
2. Download Return Preparation Software for selected Return Form. தொடுப்பை சொடுக்கி ITR-1
பக்கத்திற்கு பிடி எப் பக்கத்திற்கு சென்று உங்கள் வருமான விவரங்களை உள்ளீடவும்.
3. உங்கள் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாரம் 16 ல் உள்ளபடிக்கு விவரங்களை பூர்த்திசெய்யவும்.
4. நீங்கள் உள்ளீடு செய்தப் பிறகு "Check form" என்கிற பொத்தானை சொடுக்கி சரிபார்க்கவும். தவறுகள் இருந்தால் திருத்தவும்.
5. Generate bar code பொத்தனை அழுத்தவும்.
6. Export to XML பொத்தானை அழுத்தவும், பிறகு .xml என்கிற கோப்பை கணினியில் சேமிக்கவும்.

7. பிறகு மறுபடியும் http://incometaxindiaefiling.gov.in
பக்கத்திற்கு வந்து லாகின் செய்தப் பிறகு Submit return என்கிற பொத்தானை அழுத்தவும்.

8.சேமித்த xml கோப்பை browse கொடுத்து submit செய்யவேண்டியது தான்.
9. இறுதியாக உங்களுக்கு ITR-V சான்றிதழ் பாரம் கிடைக்கும். அவற்றை பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவும்.

சொதப்பல்:
XML கோப்பை அப்லோட் செய்யும்பொழுது பிறந்த தேதி சொதப்பியது... அவற்றை ஒருவாறு ஊகித்தவாறு notepad திறந்து மாற்றம் செய்து அனுப்பினேன்.

****-MM-**
இவற்றில் **** வருடமும். MM=01, **01
கொடுத்தேன்.





Note: above images are for publics to get utilized and pay their tax on date. If displaying above images (with govt logos) are illegal please post a comment quoting the laws related to it.

Labels: , ,

1 Comments:

At 7/31/2007 1:45 AM, Blogger சின்னப் பையன் said...

எனக்கும் நேற்று இதே தவறு ஏற்பட்டது. ஒரு முக்கியமான தகவல்: மின் கையொப்பம் (Digital signature) இல்லாவிடில், நீங்கள் அந்த சான்றிதழ் பாரத்தை போஸ்ட் (Snail mail) செய்யவேண்டும். இதை அதே website-இல் பார்க்கலாம்.

 

Post a Comment

<< Home