Thursday, October 25, 2007

புதிய கருவிகள்

தமிழூற்று தளம் கடந்த ஒரு ஆண்டு நிறைவுக்குப்பின் சற்று தான் எனக்கு திருப்திகரமாக இருக்கிறது.

இரண்டு புதிய கருவிகள் உருவாக்கியிருக்கிறேன். இரண்டும் வலைப்பதிவுகளுக்கு முக்கியமானவை.

தொடர்புடைய குறிச்சொற்கள்:

புத்தகத்திற்கு index கோர்ப்பது போல் குறிச்சொற்களுக்கு index இந்த 'தொடர்புடைய குறிச்சொற்கள்' பக்கம்.... இதில் பயனர்கள் குறிச்சொற்களைச் சேர்க்கவோ, நீக்கவோ-pending முடியும்...இதில் சேர்ப்பவர்/நீக்கியவர் பற்றிய விவரங்கள் சேகரிக்கலாம்.

http://techtamil.in/relatedtags/இந்தியா

தொடர்புடைய வலைப்பதிவுகள்:(feedcloud)

குறிப்பிட்ட குறிச்சொற்களுக்கு எந்த வலைப்பதிவில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் கருவிதான் இது.

http://techtamil.in/feedcloud/அரசியல்

மற்ற மாற்றங்கள்...

1. முகப்புப் பக்கத்தில் 'இன்றையப் பதிவுகளில் ஒவ்வொரு முறையும் அடுத்து சொடுக்கும்போது மறுமுறை 'முந்தய' பக்கத்திற்கு செல்ல அவை திரும்பவும் சர்வருக்குச் செல்லவேண்டியதில்லை...அவை உடனுக்குடன் முந்தய பக்கங்களைப் பார்க்கலாம்...அதேபோல் அடுத்த பக்கமும் ஏற்கெனவே பார்த்திருந்தால் திரும்பவும் செர்வருக்குச் செல்லவேண்டாம்...

2. குறிச்சொற்களில் space விட்டு வரும் குறிச்சொற்கள் முதலில் பிறகு அவை ஒத்த குறிச்சொற்களுக்கான தொடுப்புகள் கிடைக்கும் படி செய்திருக்கிறேன்.

உதா. http://techtamil.in/tag/பெண்கள் அனுபவம் பக்கத்தில் முதல் தொடுப்பு பெண்கள் அனுபவம் தொடர்பான தொடுப்பு மற்றவைகளில் பெண்கள் என்றோ, அனுபவம் என்றோ இருக்கலாம்.

கூகிள் தமிழ் தேடல்களில் தமிழூற்றுத் தளத்தை பயன்படுத்திக்கொள்கிறது.தினமும் சுமார் ஆயிரம் வார்த்தைகளை அது இந்த தளத்தில் தேடுகிறது.

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home