சென்னையில் நடைபெற்ற வலைப்பூ கருத்தரங்கு

இந்திய அளவிலான வலைப்பூ எழுத்தாளர்கள் ஒன்றினையும் நிகழ்ச்சி India's Biggest Blog Unconference சென்னையில் டைடல் பூங்காவில் சனி, ஞாயிறு 9,10 இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கலந்து கொண்டு கிரிக்கெட் சம்பந்தமான podcasting, audiocasting, போன்றவைகள் மூலம் நேரடியாக ஒலிபரப்புவது பற்றி விளக்கினார்.
முக்கிய விளம்பரதாரர்களாக யாகூ, ford, ஜோஹோ, நோக்கியா, இண்டெல் போன்றவர்கள் பங்கெடுத்தனர். நேற்று இரவுதான் இதுபற்றிய செய்தி ஒன்று தமிழ்மணத்தில் வந்தது.
முக்கிய விளம்பரதாரர்களாக யாகூ, ford, ஜோஹோ, நோக்கியா, இண்டெல் போன்றவர்கள் பங்கெடுத்தனர். நேற்று இரவுதான் இதுபற்றிய செய்தி ஒன்று தமிழ்மணத்தில் வந்தது.
இன்றைய ஹைலைட்:
1. கோலாவின் போட்டோ ஒன்றை ப்ளாக் செய்ததால் கோலா கம்பெனி 20 லட்ச ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பற்றியும், பின்னர் அதனை சக ப்ளாக்கர்கள் வழியாக பத்திரிக்கைகள், தொலைகாட்சிகளை அனுகியது பின்னர் மூன்றே நாளில் உலகம் முழுவதும் செய்தி பரவச்செய்ததைப் பற்றி ஒருவர் விளக்கினார்.
2. blogcamp ன் முக்கிய அமைப்பாளரான க்ருபா ஷங்கர் முன்பு எழுதிய ஒரு பதிவில் ஐ.சி.ஐ.சி.ஐ.ன் ஏடிஎம் ன் செக்யூரிடி குறைபாடுபற்றி எழுத பின்னர் மிரட்டல் வந்தது பற்றி விளக்கினார்.
3. இந்தியாவில் பாட புத்தகங்கள் அரசியல் ரீதியாக எழுதப்படுவதால் நேர்மையற்றவையாக இருப்பதால், காப்பிரைட் போன்ற பிரச்சினைகளினால் புத்தக விலை அதிகமாவதால்,நேர்மையாகவும் புத்தகங்கள் மலிவாக கிடைக்க open source எனப்படும் க்னூ முறையில் புத்தகங்கள் வெளியிடுவது போன்ற ஆலோசனை வழங்கப்பட்டது.
4. பங்களாதேஷ் ப்ளாக்களுக்கு அதிகம் கிராக்கி இருப்பதாக உரையாற்றிய Aparna Ray , உலகில் பங்காளிகள்,கனடா மக்கள் அதிக (மாணவர்கள்) விக்கிபீடியா பயன்படுத்துவதாக தெரிவித்தார். அதேசமயம் பங்காளியில் ப்ளாக் எழுதுவது எழுத்துருக்கள் தொடர்பான பிரச்சினைகளால் வளராமல் உள்ளதாகவும் அதற்கு தீர்வு யுனிகோட் என்கிற மிகப்பெரிய்ய்ய உண்மையை கூறிவிட்டுச்சென்றார். அதற்கு (சென்னையில் உள்ள தமிழர்கள்) உதவ கேட்டுக்கொண்டார். (Unicode - சபாஷ் தமிழர்கள்)
5. common creative licence பற்றி விவாதிக்கப்பட்டது. common creative licence ன் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை, படத்தை பிறர் திருடினால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள், அதற்கான ஒரு அமைப்பு இந்தியாவில் இன்னும் இல்லாமை போன்ற குறைகள் பற்றி அலசப்பட்டது.
6. audio casting எனப்படும் வலைப்பூக்களில் ஒலிஒலி பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டது.
7. branding எனப்படும் வலைப்பூவின் கட்டுரைகள், கோப்புகளை தரப்படுத்துதலின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.
8. (இன்று) கலந்து கொண்டவர்களில் பத்திற்குள் தான் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். அதிலும் 30 வயதிற்கு கீழுள்ளவர்கள் 60 சதவீதம் இருக்கும்.
9. வலைப்பூக்களும் மீடியா வகையை சார்ந்தது என்றும் வலைப்பதிவர்கள் பொதுப்பிரச்சினைகளை எழுதும்பொழுது ஆதாரங்களை அவசியம் வைத்திருக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கப்பட்டது. (அட! என்னங்க, நாற்பதிற்கும் மேற்பட்ட ஒருவர் தானுங்க அந்த அறிவுரை வழங்கினார்). Freedom of Expression என்பது நாட்டின் இறையாண்மையை கருத்தில் கொள்ள வேண்டுமென்றும் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை தாண்டுவது தவறு என்று அறிவுறுத்தப்பட்டது.
மென்பொருள் வேலையை விட்டுவிட்டு ஒருவர் வலைப்பூ எழுதுகிறார் என்கிற செய்தி கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன் ஹிந்து பத்திரிக்கையில் படித்த நான் இன்று ஆக்ராவிலிருந்து விருந்தினராக கலந்து கொண்ட அமித் அஹர்வாலை சந்தித்து நுட்பங்கள் பற்றி சிறிது பேசினேன்.
புகழ்ப்பெற்ற தமிழ்மணம் என்கிற வலைப்பூ திரட்டியில் இதுவரை 1100 வலைப்பூக்கள் உள்ள நிலையில் தமிழ் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எத்தனை தமிழ் வலைப்பதிவர்கள் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.
புகழ்ப்பெற்ற தமிழ்மணம் என்கிற வலைப்பூ திரட்டியில் இதுவரை 1100 வலைப்பூக்கள் உள்ள நிலையில் தமிழ் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எத்தனை தமிழ் வலைப்பதிவர்கள் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.
5 Comments:
/உலகில் பங்காளிகள்/
அவர்கள் நமது பங்காளிகளாக இருந்தாலும் வங்காளிகள் என்று எழுதினால் சரியாக புரியும்.
எவ்வளவு பேர் கருத்தரங்கிற்கு வந்திருந்தார்கள்?
தமிழ்மண முகப்பில் ஒரு விளம்பரம் வைத்திருந்தால் நிறைய சென்னை வாழ் பதிவர்கள் தமிழ் பதிவர்கள் கலந்துகொண்டிருப்பார்கள்.
நல்ல விஷயம் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அடடா... தகவல் தெரியாமப் போச்சே! மல்டி நேஷனல் நிறுவனங்களின் அட்டூழியங்களை இன்னும் வலுவாக எதிர்க்க வேண்டும். அம்பலப்படுத்திட வேண்டும். இத்தகைய நிறுவனங்களின் மிரட்டலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பிட ஒவ்வொரு மாநிலங்களிலும், மாவட்ட அளவிலும் வலைப் பதிவர்களின் அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமைப்புக்கள் எங்கும் தானாக உருவாவதில்லை. ஆளும் வர்க்கம்தான் அதனை உருவாக்குகிறது. தகவலுக்கு நன்றி
Hi can we have the tips in English as well?
தமிழ்மணத்தில் சனி இரவு சுமார் 11 மணியளவில் தான் ஒருவர் (பெயர் கூட மறந்து விட்டது) எழுதியிருந்தார். அவருக்கு நன்றி.
அதைப்பார்த்தபின் அமைப்பாளர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு மறுநாள் கலந்து கொண்டேன். தமிழ்மணத்தில் மட்டுறுத்தல் செய்யாதவர்களின் பதிவுகள் சீக்கிரம் காணாமல் போய்விடுகின்றன, நம்முடையதும் தான்.
Dear Sunil,
You are correct. I will write in english too..
Post a Comment
<< Home