Tuesday, September 12, 2006

அஜாக்ஸிலிருந்து அட்லாஸ் வரை.

அஜாக்ஸ்(ajax) என்கிற இணைய நுட்பம் ஏதோ இப்பொழுது தான் வெளிவந்திருப்பதாகவும் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 1998 லிருந்தே XMLHttp என்கிற activex control மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுவிட்டது..
அதன் அவசியத்தை புரிந்து கொண்ட ஷஃபாரி,ஃபயர்பாக்ஸ் , நெட்ஸ்கேப் போன்ற உலாவிகள் உடனே உள்வாங்கிக்கொண்டன.

ஆனால் சமீப காலமாகத்தான் மிகவும் பிரசித்தமானது. அதுவும் மைக்ரோசாப்டிற்கு இணையாக போட்டியில் களம் காணும் கூகிள் நிறுவனத்தின் சில வெளியீடுகள் தான். ஆரம்பத்தில் ஜிமெயில் வெளிவந்த பொழுது பலர் அதன் நுட்பத்தை ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர் அதில் சிலர் கூகிள் hidden frame களை பயன் படுத்துவதாக தெரிவித்தனர்.பிறகு கூகிளின் Google Suggest என்கிற தேடுபொறியின் விசேச பக்கமும் சேர்ந்து கொள்ள சூடு பிடிக்க ஆரம்பித்தது. அத்துடன் கூகிளின் Google Earthம் சேர்ந்து கொண்டது.

ஒரு எழுத்தை (character) textbox இல் இட்டவுடன் அந்த எழுத்தின் தொடக்க வார்த்தைகள் கூகிளின் சர்வரின் இண்டக்ஸில் இருக்கும் பட்சத்தில் குறைந்தது 10 வார்த்தைகளை காண்பிக்கும். இது போன்றவைகளைத் தான் autocomplete எனப்படும்.


Ajax என்கிற Asynchronous Javascript and xml என்று பெயர் சூட்டியவர்கள் Adaptive Path என்கிற நிறுவனத்தினர்.

சரி இப்பொழுது அதன் உபயோகங்களைப் பற்றி பார்போம். நீங்கள் உங்கள் தளத்தில் வாசகர்கள் உள்ளே நுழைய username, password கொடுக்கவேண்டி ஒரு login பக்கம் அமைக்கிறீர்கள். அதில் சரியான username, password கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று சர்வரில் உள்ள டேட்டாபேஸில் தேடவேண்டும். சரியாய் இருக்கும் பட்சத்தில் உள்ளே நுழைய அனுமதிக்கவேண்டும் இல்லையெனில் "username or password does not exist" என்கிற செய்தியை உலாவியில் தெரிவிக்கவேண்டும்.

ajax உபயோகிக்காத பட்சத்தில் என்ன செய்வீர்கள் form tag ல் உள்ள action attribute ல் asp/php பாதை கொடுத்து சரியாய் இருக்கிறதா என்று பார்ப்போம். தவறான உள்ளீடாய் இருக்கும் பட்சத்தில் இந்த லாகின் பக்கம் முழுவதும் சர்வரிலிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டியுள்ளது.

அதாவது இரண்டு முறை சர்வரின் லோடு(server round trip) அதிகமாகிறது.
username, password ஆகிய இரண்டு மட்டும் தான் சோதனை செய்யவேண்டும் ஆகையால் இந்த இரண்டின் உள்ளீடுகளை மட்டும் அனுப்பி ஏன் சரிபார்க்கக்கூடாது. இதற்கு தான் அஜாக்ஸ் உபயோகமாய் இருக்கிறது.

இது ஒரு சிறு உதாரணம் தான். சர்வரில் சரிபார்த்தலுக்கு மட்டும்தான் என்றில்லை,
டேட்டாபேஸிலிருந்து மெனு போன்றவை, உடனுக்குடனான முகவரிகள், அதுபோல் எவ்வளவு பெரிய (sql query) கொரியானாலும் அதன் ரிசல்ட். இன்னும் பல. அஜாக்ஸில் ஒரு விசேசம் என்னவென்றால் நீங்கள் html கோப்பிலிருந்தே டேட்டாபேஸின் தகவலை பிரிண்ட் செய்யமுடியும் என்பது தான்.

சரி html லிருந்து சர்வருக்கு எப்படி உள்ளீடுகளை அனுப்புவது?

querystring வழியாகத்தான்.. அதாவது http://www.yourwebsite.com/validateuser.asp?
uid=username&pwd=password, இங்கு validateuser கோப்பில் மேலேஉள்ள credentials கொண்டு சரிபார்க்கவேண்டும். சரியாகும் பட்சத்தில் அதற்குண்டான operations நடக்கும் அத்துடன் response/echo போன்றவை மூலம் பிரிண்ட் செய்யவும். தவறாகும் பட்சத்தில் தவறு என்று எழுதலாம். பின்னர் அவைகளை client scripts வாங்கி உலாவியில் காண்பிக்கும்.

இறைவன் நாடினால் அடுத்த பதிவில் தொடரும்...

6 Comments:

At 9/13/2006 3:14 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல பதிவு (தொடர்). வாழ்த்துக்கள்.

 
At 9/14/2006 10:50 PM, Blogger மாஹிர் said...

நன்றி அலெக்ஸ் சார்!

 
At 9/16/2006 12:29 PM, Blogger Suhail Ahamed said...

Great job mahir, i appeciate

 
At 9/16/2006 12:30 PM, Blogger Suhail Ahamed said...

Great Job Mahir, i appreciate your hard work, and im expecting more on AJAX and ATLAS, im sure u will do...

 
At 9/18/2006 11:20 PM, Blogger biotechnologist2020 said...

Mahir,
First time,I am visiting yr blog
Itz really a good initiative,
vaazhthukkal.

 
At 9/30/2006 2:07 PM, Blogger மணியன் said...

மாஹிர், முதன்முறையாக உங்கள் பதிவுகளை இன்று பார்த்தேன். இன்றைய வலைபதிவர்கள் பெரும்போலோனோர் கணினியை பயன்படுத்தினாலும் வேறு துறையைச் சேர்ந்தவர்கள். உங்கள் கட்டுரைகள் அனைவாருக்கும் பயனுள்ளதாக எளிமையாக இருக்கின்றன. தொடருங்கள்; வாழ்த்துக்கள்.

 

Post a Comment

<< Home