Wednesday, February 14, 2007

I Love Google!!

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்னு திருக்குறளை பிரிப்பது மாதிரி, குறிப்பால் சொல்லனும்னா நமக்கு கூகிள்பால் ஈர்ப்பு உண்டு. கூகிள் நமக்கு அறிவுப்பால் கொடுத்து கொம்பெனிகளில் பொறுப்பா(ல்) நடந்துக்க உதவுதே.


சில புறநானூற்றில் வரும் காதல் சமாச்சாரங்களும் என்னாலான விளக்கமும்:

கைக்கிளை - ஒருதலைக்காதல், வயதில் மூத்த பெண்ணை காதலிப்பது. கள்ளக்காதல் கூட இதில் வருமாம்.

பசலை - நாட்கணக்கில் தன் புருஷனை விட்டு பிரிந்து விட்ட பெண்டிருக்கு ஏக்கத்தினால் வரும் ஒருவித நோய்.

(ஊருக்கு - கிராமத்திற்கு சென்றவுடன் அங்கு இணையம் இல்லாமல் இருப்பது, கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்றவைகளை கூகிளில் தேட இணைய வசதி இல்லாமையால் நாட்கணக்கில் கூகிளை பார்க்க முடியாமல் போவது அதனால் ஏற்படும் நோய்)

ஊடல் - செல்லக்கோபம், உண்மையில் கோபமே இராது ஆனால் கோபப்படுவது போல் காட்டிக்கொள்வது. நட்பும் ஊடலும் ஒன்றாகாது.

(கூகிள் மேல் கோபப்படுவது போல் பாவ்லா காட்டி MSN சென்று அங்கு "கூகிள் செய்தி" என்று தட்டச்சிடுவது) ...



விசயத்திற்கு வருகிறேன்...

கூகிள் அரட்டையில் இப்பொழுது குரூப் அரட்டை, தமிழ் விக்கிபீடியா/feed/sites suggestions:


1. இது கூகிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல, ஆயினும் இது போன்று செய்வதை கூகிள் ஊக்கப்படுத்துவதாக அதன் தளத்திலிருந்து அறிய முடிகிறது.

2. thamizhootru@gmail.com என்கிற இந்த மின்னஞ்சலை கூகிள் சாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் "வணக்கம்" என்று டைப் செய்யுங்கால் இந்த conference ல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் உங்கள் "வணக்கம்" என்கிற செய்தி செல்லும்.இன்னொரு சிறப்பு ஜிமெயில் விண்டோவிலிருந்து கூட சாட் செய்யலாம்.

3. /help என்று டைப் செய்ய, சாட்டில் என்ன என்ன கட்டளைகள் கொடுக்கலாம் அதன் syntax போன்றவை கிடைக்கப்பெறுவீர்கள்.


4. /wiki [wikitext in tanglish] கொடுக்க முதல் பத்து விக்கிபீடியா கட்டுரைகளுக்கான தொடுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். உதா. /wiki ampuli என்று கொடுத்து எண்டர் கீயை அடிக்க \[அம்புலிமாமா\] - http://techtamil.in/show_wiki.php?id=2047

5. தமிழூற்றுக்கான கட்டளைகள் (உதா. wow:feed etc) எல்லாமே இதிலும் கொடுக்க முடியும். wow: என்பதற்கு பதிலாக இப்பொழுது "/" (without quotes) அதாவது /feed என்று கொடுக்க வேண்டும்.

குழு அரட்டை வசதி இதில் இருப்பதால் இதனை வலைப்பதிவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். இது 24x7 online ல் இருக்கும். வரம்பு மீறுபவர்களை தடை செய்யவும் இதில் வசதியுள்ளது. மேலாளர்கள் நியமிக்கப்பட்டு அரட்டை அடிப்பவர்களினது செயற்பாடுகள் கண்கானிக்கப்படும்.

அத்துடன் இது ஜிமெயில் என்பதால் நீங்கள் சாட் செய்வது எல்லோர் முகவரியிலும் தானாகவே சேமித்துக்கொள்ளவும் முடியும்.



அப்பாடா நாமும் லவ்வ சொல்லியாச்சு!

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home