Monday, January 15, 2007

தமிழூற்றின் பொங்கல் வாழ்த்துக்கள்!

புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து கரும்பைத் தின்று (நன்றியுடன்) உழவர்களின் உழைப்பை உலகிற்கு உணர்த்தும் தமிழர்கள் திருநாளாம் தைப் பொங்கல் தின வாழ்த்துக்கள்.



எல்லோர் இல்லத்திலும் இனிப்பு(ப் பொங்கல்) வழங்கி கொண்டாடும் இந்நாளில், நான் உருவாக்கிவரும் தமிழ் கருவிக்கு (Say வாவ்(இன்னும்)) தமிழில் நல்ல பெயர் சூட்டி மகிழ்கிறேன். பெயர் சூட்டுவிழாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று யாரும் குறைபட்டுக் கொள்ளக்கூடாது. எல்லோர் வீட்டிலும் இன்று இனிப்புப் பொங்கல் செய்து தரும்படி தாய்மார்களை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழூற்றின் இனிமையான சிறப்புகளும் பயன்களும்:

1. ரீடர்:

  1. இணையத்தின் முதல் மினி ரீடர்
  2. ஆயிரத்திற்கும் மேற்பட்ட RSS ஊற்றுகள்.
  3. பதினொன்றாயிரம் கட்டுரைகள், தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் நாளொன்றுக்கு.
  4. கட்டுரைகளுக்கு விரும்பிய/பொருந்திய குறிச்சொற்களைச் சேர்க்கும் வசதி.
  5. குறிச்சொற்களைக்கொண்டு தேடும் வசதி
  6. குறிப்பிட்ட வலைப்பூவில் உள்ள கட்டுரைகளை மட்டும் பார்க்கும் வசதி
  7. இன்று, நேற்று, இந்தவாரம் அல்லது குறிப்பிட்டநாளில் வெளியான கட்டுரைகளை பார்க்கும் வசதி
2. விக்கிபிடீயா:
  1. பகடை(குறிப்பில்வழி) விக்கிபீடியா தலைப்புகள்
  2. தமிழ் விக்கிபீடியா தலைப்புகளின் Suggestions மற்றும் தொடுப்புகள்
3. விக்சனரி:
  1. ஆங்கிலம் - தமிழ் விக்சனரி Suggestions மற்றும் தொடுப்புகள்

4. ஆயிரத்தி ஐநூறு தமிழ் இணையதளங்களின் உடனடித் தொடுப்புகள்.
5. மினி தமிழ் செய்தித் தளங்களின் தொடுப்புகள்.
6. மினி தமிழ் மின்னிதழ்களின் தொடுப்புகள்
7. மினி தமிழ் மடலாற்குழுக்களின் தொடுப்புகள்
8. தமிழ் புத்தகத் தேடல்
9. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கருவியை உங்கள் தளத்திலேயே நிறுவிக்கொள்ளும் வசதியாக நிரலி.

இவையனைத்தும் web2.0 எனும் உயரிய இணைய நுட்பத்தில், இலவசமாயும்....

மேலதிக உதவிக்கு "நண்பன்" nanban@techtamil.in என்கிற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

தொடுப்பு: http://techtamil.in

நிரலி (Source Code):


Demo:


3 Comments:

At 1/15/2007 4:05 PM, Blogger ✪சிந்தாநதி said...

தமிழூற்று பெயரும் பயனும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

 
At 1/16/2007 9:44 AM, Blogger அறிஞர். அ said...

நன்றி சிந்தாநதி...

 
At 1/16/2007 4:19 PM, Anonymous Anonymous said...

தமிழூற்றின் படைப்பு வளர வாழ்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்
ஹஸன்
சென்னை
9841648430

 

Post a Comment

<< Home