gchat now group chat
இப்பொழுது அநேகமாய் நம்ம எல்லோரும் ஜிமெயில் அரட்டை உபயோகித்து வருகிறோம். ஆனால் குழுவாய் அரட்டை அடிக்கும் வசதி இதுவரை இல்லை. இப்பொழுது இதனை தமிழூற்று மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கூகிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல. (NOT GOOGLE's OFFICIAL ANNOUNCEMENT)
இதில் சேர்ந்து குழுவாய் அரட்டை அடிக்க:
1. ஜிமெயில் முகவரி: thamizhootru@gmail.com சேர்த்துக்கொள்ளுங்கள்.
2. உடனே thamizhootru ஆன்லைனில் இருக்கப்பார்பீர்கள்.
3. அதில் "ஹாய்" என்று டைப் செய்ய நண்பர்கள் உங்களை வரவேற்பார்கள்.
4. ஏற்கெனவே உள்ளவர்களை அறிய /names (அதாவது slash names என்று அதில் தட்டச்சிட வேண்டும்)
5. முற்றிலும் வெளியேற /quit என்று டைப் செய்யவேண்டும். (மீண்டும் இனைய மேலிருந்து படிக்கவும்)
6. தொடர்ந்து இந்த அரட்டைமுகவரியை வைத்திருக்கவேண்டும் ஆனால் "சிறிது நேரம் அல்லது நாட்கள் என்னை தொல்லை செய்யவேண்டாம்" என்று நீங்கள் நினைத்தால் /nochat என்று உள்ளிடவும்.
7. no. 6 நீங்கள் தேர்வு செய்திருந்தால், தொடர விரும்புவதாயின் /chat என்று டைப் செய்யவும்.
8. குறிப்பிட்ட பயனருக்கு மட்டும் நீங்கள் செய்தி அனுப்ப /msg nickname message
ஆமாம் சார் அதுதான் ஏகப்பட்ட அரட்டை வசதிகள் இணையத்தில் இருக்குதே, கூகிள் வழியாக தருவதால் அப்படி என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்பது நமக்கு கேட்கிறது.
1. இனிய தமிழில் அரட்டை அடிக்கும் வசதி.
2. நம்ம அடிக்கும் அரட்டை ஜிமெயிலில் சேமிக்கும் வசதி
மற்ற முக்கிய சிறப்புகள்:
1. தமிழ் தளங்களுக்கான தொடுப்புகள் suggestions.
2. தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளுக்கான தொடுப்புகள்
3. உங்கள் ப்ளாக்கில் உள்ள தலைப்புகள் அதன் தொடுப்புகள்
4. இன்று, நேற்று, நாளை, அல்லது குறிப்பிட்ட நாளில் வெளியான தலைப்புகள் மற்றும் அதன் தொடுப்புகள்
இவை அனைத்தும் ஜிமெயில் விண்டோவில் என்பது சற்றே ஏற்றுக்கொள்ள அல்லது நம்பமுடியாத ஒன்றாய் இருக்கிறதா? உடனே சோதித்துப் பாருங்கள்... thamizhootru@gmail.com
இதனைக்கொண்டு....
1. உடனுக்குடன் தமிழ் இணைய உதவிகள் வழங்கலாம் / பெறலாம்.
2. உடனுக்குடனான வலைப்பூ செய்திகளை படிக்கலாம், குறிப்பிட்ட வலைப்பூவில் உள்ள தலைப்புகளை பார்க்கலாம்
3. தங்கள் படைப்புகள், ஆக்கங்களுக்கான தொடுப்புகளை பறிமாறிக்கொள்ளலாம்.
4. உலகெங்கிலும் உள்ள தமிழ் வலைப்பதிவர்களுக்கான சந்திக்கும் இடமாக, கருத்து, செய்தி சேகரிக்கும் இடமாக ஆக்கிக் கொள்ளலாம்.
5. புதிதாய் நட்பு பாராட்டலாம்.
இன்னும் பல...
0 Comments:
Post a Comment
<< Home