Sunday, January 06, 2008

தமிழர் வாக்கு (beta) அறிவிப்பு

வெகு சிலரே பயன்படுத்தி வந்தாலும்....

தமிழர் வாக்கு உருவாக்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். ஆனால் சற்றுமுன் உபயோகித்தப் பிறகுதான் சிலருக்கு தெரிய வந்திருக்கிறது. சர்வேசன் பதிவுகளில் சர்வே எடுத்ததை பார்த்தப்பிறகுதான் ஏற்கெனவே ஒளித்து வைத்திருந்ததை வெளியிட்டேன். துரதிருஷ்டமாக வெகுசிலரே பாவித்து வருகின்றனர்.

சரி அந்த வெகுசிலருக்காகவே, அடுத்த தமிழர் வாக்கு v1.0 வர இருக்கிறது. அதில் Checkbox, radio options ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், ஓட்டு முடிவுகளை மறைத்து வைத்து நீங்கள் மட்டும் பார்க்கலாம். குறிப்பிட்ட நாளுக்குப் பின் ஓட்டெடுப்பை தானாகவே நிறுத்தி முடிவுகளை காண்பிக்கலாம்.

ஆகவே ஏற்கெனவே உள்ள உங்கள் ஓட்டு முடிவுகளை screenshot எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் முந்தைய நிரல்களும், டேபிள்களும் தற்பொழுது எனக்கு பயன் தரவில்லை ஆகையால் அவற்றை களைய வேண்டியுள்ளது....


9-ஜனவரி-08(19hrs IST) க்குப் பின் அவை கிடைக்கப்பெறாது. அத்துடன் உங்கள் வலைத்தளங்களில் உள்ள நிரல்துண்டுகளில் "தவறான உள்ளீடு" என்று காட்டக்கூடும்.
தமிழர் வாக்கு v1.0 வந்தபின் மீண்டும் புதிய வாக்கெடுப்பை உருவாக்கிக்கொள்ளலாம்.

அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்...நன்றி

Labels: ,

3 Comments:

At 1/07/2008 1:48 AM, Blogger ╬அதி. அழகு╬ said...

//ஏற்கெனவே ஒழித்து வைத்திருந்ததை வெளியிட்டேன்//

ஒழித்து = தீர்த்துக் கட்டி
ஒளித்து = மறைத்து

எப்படி வைத்திருந்தீர்கள்?

 
At 1/07/2008 3:10 AM, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

9 ஜனவரி மிக குறுகிய அவகாசமா தெரியுது. பழைய நிரல்களை அழிக்காம இதைச் செய்ய வழி இல்லையா? பழைய வாக்கெடுப்புகளின் திரை வெட்டு எடுத்து வைப்பதுங்கிறது எல்லாருக்கும் அவ்வளவு இலகுவா இருக்காதுன்னு நினைக்கிறேன்.

 
At 1/07/2008 12:07 PM, Blogger அறிஞர். அ said...

நன்றி அதி அழகு, ரவிசங்கர்.

ரவி அழிக்க வேண்டியதில்லை..

 

Post a Comment

<< Home