Sunday, November 12, 2006

Introducing "Say வாவ்!(இன்னும்)"

"சே! மறந்துட்டேன் என்று இனி நீங்கள் சொல்ல வேண்டியதில்லை, "Say, வாவ்!(இன்னும்)" என்று சொல்லி விடுங்கள்."

1. ஆரம்பத்தில் தமிழ் வலைப்பதிவுகளுக்கு வருகை தருவோர் (அல்லது பழக்கப்பட்டவர்களே கூட) ஏதோ இடத்திலிருந்து தொடுப்பு கிடைத்து வலைப்பதிவுகளுக்கு வருவர்.


உதா. thamizmanam.blogspot.com or thamizmanam.com

பிறகு சிறிது நாட்கள் கழித்து "தமிழ்மனம்" அல்லது "மனம்" என்கிற வார்த்தை மட்டும் நினைவுக்கு வரும். முழு முகவரியும் மறக்கலாம் அல்லது t(h)amilmanam.com என்று அடி அடின்னு அடித்துக்கொள்வர் தலையில், மறந்துவிட்டோமே என்று.

இனி மறந்தாலும் கவலை யில்லை. manam என்கிற வார்த்தையை மட்டும் கொடுத்து கண்டுபிடித்துவிடலாம்.

2. நீங்கள் address bar ல் கொடுக்கும் எழுத்துகளை விட குறைந்த எழுத்துகளே கொடுத்தால் போதும்.

Live Demo on right side

3. சப்தமில்லாமல், "ஸ்" என்று தமிழில் கொடுத்து பாருங்கள், ஸ்டீவ் இர்வினுடைய விக்கிபீடியா பக்கம் கிடைக்கும்.

4. உங்கள் வாசகர்களுக்கு, உங்கள் வலைப்பூ/தளங்களிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பதிவுகள்/வலைதளங்கள்/விக்கிபீடியா தலைப்புகளுக்கு தொடுப்பு கொடுங்கள்.

இந்த முயற்சி பயனுள்ளதாய் இருக்கும் பட்சத்தில் நீங்கள் வலைப்பதிவுகள்/ இணையதளம் வைத்திருப்பவராயின் கீழே உள்ள கோடை வெட்டி ஒட்டுங்கள்.

<iframe id="frmid" src="http://www.tamilbookskadal.com/2kblogs.html" frameborder="0" width="210" allowtransparency="true" height="270"></iframe>

அப்புறமென்ன, "Say, வாவ்!(இன்னும்)" என்று பின்னூட்டமிடுங்களேன்.

8 Comments:

At 11/12/2006 7:14 PM, Anonymous Anonymous said...

Good tool!

Would you charge for this tool in future?

 
At 11/12/2006 10:32 PM, Blogger அறிஞர். அ said...

Thanks Marg,

I will not charge for using this tool. Instead I may put Advertisements.

 
At 11/12/2006 11:30 PM, Blogger விருபா - Viruba said...

அருமை, அருமை - எங்கள் பாராட்டுக்கள்

 
At 11/12/2006 11:36 PM, Blogger அறிஞர். அ said...

விருபாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்.

 
At 11/27/2006 3:37 AM, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாஹிர், நீங்க மட்டும் என் பக்கத்தில் இருந்தீங்கன்னா கட்டிப் பிடிச்சு தலை மேல தூக்கி வைச்சு கொண்டாடிடுவேன். முதல்ல இப்படி தமிழுக்கு ஒரு கருவி கொண்டு வரலாம்னு நீங்க நினைச்சது அருமை. அதுல தமிழ் விக்கிபீடியா இணைப்புகள முதன்மைப்படுத்தியது, குறிப்பில்வழி விக்கிபீடியா இணைப்புகளை தந்திருப்பது எல்லாமே அருமை. இந்த கருவிய இன்னும் சோதிச்சு பார்த்திட்டு மேம்படுத்த ஆலோசனை தர்றேன்..நாங்க எல்லாம் விக்கிபீடியாவுல உசிர கொடுத்து கட்டுரை எழுதினாலும், இது மாதிரி நாலு பேருக்கு தெரிய வைக்கிறதும் பெரிய விஷயம். ஏற்கனவே வலைப்பதிவு வலப்பட்டையில் விக்கிபீடியா இணைப்புகள் இருப்பது விக்கிபீடியாவுக்கு பெரும் உதவியா இருக்கு. இது இன்னும் உதவும். இரண்டு வருஷம் விக்கியில உலவியும் எங்களுக்கே சில சமயம் கட்டுரைப் பெயர்கள் மறந்து போயிடுறதால் இது ரொம்ப உதவும். ஒரு முக்கியமான விஷயம், இந்த அருமையான கருவிக்கு நல்ல தமிழ்ல பேர் வைக்கலாமே..அது உங்க தனி விருப்பம் தான்னாலும், say, vow இரண்டுமே ஆங்கிலப் பேராச்சே :( தமிழர்களின் கண்டுபிடிப்புக்கு உழைப்புக்கு தமிழிலேயே பேர் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இன்னொன்று, இந்தக் கருவியின் சின்னத்தில் உள்ள இன்னும் என்ற எழுத்து பிழையாக எழுதப்பட்டிருக்கிறது. னு-வில் உள்ள உகரக்குறி பிழையாக இருக்கிறது. கவனித்து திருத்துங்களேன். அப்புறம், அடிக்கடி விக்கித் திட்டங்களுக்கு வந்து போங்க..ஆலோசனைகளையும் தாங்க..தமிழ் விக்கிபீடியாவுல பயர்பாக்ஸ் அகராதி பத்தி பேசப்போய் தான் அது பத்தி கட்டற்ற தமிழ் கணிமை குழுவுல பேசப்பட்டு வருது. சீக்கரம் நல்ல கருவி உருவாக்குவோம்.

 
At 11/27/2006 3:45 AM, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாஹிர், உங்க கருவிய கண்டு எனக்கு அளவிலாத மகிழ்ச்சி. துள்ளிக் குதிக்காத குறை தான். உங்க கருவிய என் வலைப்பதிவுல இருந்தும் தர்றேன். அப்படியே, குறிப்பில்வழி விக்கி பக்கத்துக்கான codeம் தருவீர்களா? விக்கிபீடியா அனைத்துப் பக்கங்களின் இணைப்புகள் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Allpages என்ற பக்கத்தில் கிடைக்கும். இவற்றில் வழிமாற்றுப் பக்கங்களுக்கான இணைப்புகளும் இருப்பது கூடுதல் நன்மை. இதன் மூலம் பயனர்கள் எளிதாக கட்டுரைகளுக்கான மாற்று எழுத்துக்கூட்டல்களை பயன்படுத்தியும் கட்டுரைகளை வந்தடையலாம். விக்சனரி வளர்ந்த பிறகு இது போன்று விக்சனரிக்கும் ஒரு கருவி எழுதலாம். --~~~~

 
At 11/28/2006 7:23 PM, Blogger அறிஞர். அ said...

தமிழ் விக்கிபீடியா மேலாளர்களில் ஒருவரான தாங்கள் என் வலைப்பூவிற்கு வருகை தந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

மிக்க நன்றி!!.

தமிழ் விக்கிபீடியாவில் நம்மவர்களின் பங்கு மிக குறைவாய் உள்ளது வருத்தத்திற்குரியதே. உங்களைப்போன்ற வெகு சிலரே அதன் பணிகளில் தீவிரமாக உள்ளனர்.

உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

//say, wow இரண்டுமே ஆங்கிலப் பேராச்சே :( தமிழர்களின் கண்டுபிடிப்புக்கு, உழைப்புக்கு தமிழிலேயே பேர் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்//

பெயர் வைப்பதற்கு நேரம், காலம் எல்லாம் பார்பதில்லையா அதனால் அவசரத்தில் வைத்துவிட்டேன்.
விரைவில் மாற்றுகிறேன்.

 
At 12/01/2006 5:17 PM, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

mahir,
to give some feedback - i saw wikipedia namespace articles appearing in the random pages link..but it should not be appearing. pages starting with wikipedia: or விக்கிபீடியா: are not articles but content about managing wikipedia. so they should not appear in random links. next, i am curious how u r adding the page links to your database. its best to make it automated and update once in a month atleast. because we frequently underatke cleanup works and some pages can be deleted regularly. it won look good if u give link to a dead page. but i have no idea how to do this automatically. once this vow tool gets popular people might assume that if the topic doesnt show in this then the article is not there in wikipedia itself. so its ur duty :) to update the article list often. its my kind request. thanks for the info about wikipedia CD too..to come up with such a CD for ta wiki minimum it will take 2 more years :( what to do? ! we are short of volunteer writers :(

 

Post a Comment

<< Home