ஒலி/ஒளி, புகைப்படம், அன்புடன் அறிமுகம்...
தானியங்கி முறையில் திரட்டப்படும் பதிவுகளிலிருந்து புகைப்படம், ஒலி/ஒளி கோப்புகள் திரட்டப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
இது கூகிள் செய்தி போன்ற பக்கம் ஒன்று உருவாக்க வேண்டும் என்கிற உந்துதலின் பேரில் நடந்த முயற்சியின் விளைவாக கிடைத்தது.
youtube போன்றவற்றில் உள்ள குறிச்சொற்களைவிட வலைப்பதிவுகளில் வரும் குறிச்சொற்களினால் வரும் பயன்களில் முந்தயது அனானியாக வரும் குறிச்சொற்கள், பிந்தயது பொறுப்புடன் கூடியக் குறிச்சொற்கள்.
ஒரே கல்லில் மூன்று (ஒலி, ஒளி, புகைப்படம்) மாங்காய்.
அன்புடன்:

இணைய கவிஞர்களை உற்சாகப்படுத்தி வளர்த்தெடுப்பதற்காகவே ஒரு குழுமமா என்று எண்ணுமளவிற்கு கடந்த மூன்றாண்டுகளாக சுமார் 800+ உறுப்பினர்களுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது "அன்புடன் குழுமம்". கவிதை மட்டுமின்றி தமிழார்வலர்கள் பலர் இக்குழுமத்தில் இணைந்து பல்சுவை தகவல்களை வாரிவழங்கி வருகின்றனர். ஒருவர் தன்னுடைய படைப்புகளை அனுப்பினால் அவருக்கென்று ஒரு இலையை உருவாக்கி அவரை மேலும் எழுதத்தூண்டும் இதன் நிர்வாகிகள். இப்படிப் பல...அதன் மடல்களை தமிழூற்றின் முகப்புப் பக்கத்தில் இன்றையப் பதிவுகள் அருகில் (டேப்) காட்சிப்படுத்துவதில் மகிழ்ச்சி.
http://techtamil.in
http://techtamil.in/feed/anbudan
பதிவுகளை இணைக்க:
குறிச்சொற்களைக் அடிப்படையாகக் கொண்ட தமிழூற்று தளத்தில் பதிவுகளை இணைப்பதால் அதன் சேவைகளை பெறலாம். குறிப்பாக குறிச்சொல் மேகம், குறிச்சொற்களுடனான ஓடைகள் போன்றவை.
அதில் உங்கள் பதிவுகளை இணைக்க http://techtamil.in/addblog.php பக்கத்திற்கு செல்லுங்கள்
குறிப்பு:
1. உங்கள் ஓடையின் முழு முகவரியையும் கொடுக்கவும். உதாரணமாக http://techtamil.in/atom.xml , வெறும் http://techtamil.blogspot.com என்று கொடுத்தால் போதாது.
2. வேர்ட்பிரஸை இணைக்க http://techtamil.wordpress.com/wp-rss.php என்று கொடுக்கவும்.
Labels: அறிமுகம், அன்புடன், ஒலி, ஒளி, புகைப்படம், யூடியூப்
2 Comments:
DEAR MAHIR,
KINDLY ADD MY BLOG IN "TECHTAMIL."
http://idhuthanunmai.blogspot.com/
I THINK I MADE A MISTAKE BY NOT ADDING " ATOM XML " TO MY BLOG WHILE SUBMITING.
PLEASE BE KIND ENOUGH TO CORRECT THE MISTAKE AND MY BLOG APPEAR
IN TECHTAMIL.
also advise me how to "ping " techtamil whenever I post an article in my blog
REGARDS.
THIRAVIDAN
தமிழ் இணையத்துக்கு நல்ல முன்மாதிரி முயற்சி. வாழ்த்துக்கள் மாஹிர்.
***
http://thenkinnam.blogspot.com/2008/02/271.html பக்கத்தில் இருந்து வந்த musicplugin பாட்டு தமிழூற்று பக்கத்தைத் திறக்கையில் தானாகப் பாடுகிறது. பதிவரின் பதிவில் autoplay=true என்று இருப்பது காரணம், பாடலோ, படமோ இப்படி தானாகத் துவங்குவது அவ்வளவு விரும்பத் தக்கது அல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவை இப்படிப் பாடத் தொடங்கினாலும் குழப்பம் வரும். இப்படி true என்று இருப்பவற்றை உங்கள் நிரல் மூலம் false என்று மாற்ற இயலுமா?
Post a Comment
<< Home