விக்கிபீடியா மற்றும் விக்சனரிக்கான கருவிப்பட்டை
விக்கிபீடியா:
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் பயன்பாடு அதிகரிக்க வேண்டுமென்கிற அதீத ஆசையினால் "வாவ்! (இன்னும்)" கருவியில் விக்கிபீடியா மற்றும் விக்சனரிக்கான தொடுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பகடையாக மூன்று தலைப்புகள் விக்கிபீடியாவிலிருந்து வரும் அதில் உள்ள தொடுப்பை சொடுக்கி விக்கிபீடியா பக்கத்திற்கு சென்றுவிடலாம். வேறு சில தலைப்புகள் படிக்க ">" பட்டனை சொடுக்கி பெற்றுக்கொள்ளலாம்.
விக்சனரி:
ஆங்கிலத்தில் சில வார்தைகளுக்கு பொருள் தெரிய வேண்டுமா? அல்லது அதன் உச்சரிப்பு (ஸ்பெல்லிங்) தெரிய வேண்டுமா?
டெக்ஸ்ட் பாக்ஸில் நீங்கள் டைப் செய்ய அதன் முதல் மூன்று வார்த்தைகள் வரும். அதில் ஒன்றினை சொடுக்கி விக்சனரி பக்கம் சென்று அதன் பொருள் அறியலாம்.
குறிப்பு:
மேற்கண்ட கருவியை நீங்கள் விரும்புகிற பட்சத்தில் உங்கள் வலைப்பதிவுகளிலே கூட நிறுவிக்கொள்ளலாம்.
அதற்கான நிரலி (Source Code):
<iframe id="frmid" src="http://www.techtamil.in/2kblogs.php" frameborder="0" width="210" allowtransparency="true" height="270"></iframe>
Demo:
4 Comments:
வாவ், அந்த விக்கிக் கருவிப்பட்டையை எனது பதிவில் நிறுவியிருக்கிறேன். வாவ்! மிக அருமையான படைப்பு. மிகவும் பயனுள்ளது. வாழ்த்துக்கள்.விக்கியில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீதரன்(kanags) அவர்களே.
உங்களுக்கு எனது நன்றிகள்...நானும் இந்த கருவிபட்டையை எனது பதிவில் நிறுவியுள்ளேன்
ஸ்ரீதரன்(kanags) மற்றும் சின்னக்குட்டி அவர்களே உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.
Post a Comment
<< Home