Wednesday, November 29, 2006

விக்கிபீடியா CD


விக்கிபீடியா CD இப்பொழுது கிடைக்கிறது.... 8000 படங்களுடன், 4000 -5000 பக்கங்களுக்குன்டான கட்டுரைகளுடன், மூன்று மில்லியன் வார்த்தைகளுடன் உள்ள இதை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். டைனோசர்கள், விண்வெளி விவரங்கள், சூரிய குடும்பங்கள், தாவரம் மற்றும் விலங்கினங்கள் மேலும் அநேக அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், பூகோல கட்டுரைகள் இதில் சேகரித்துள்ளார்கள். எட்டு முதல் பதினைந்து வயது குழந்தைகளுக்கான பொக்கிஷம். ( size: 120MB approx. in zipped)

தமிழ்லயா? நல்லா சப்தமா நீங்களே கேட்டுக்கங்க.

தமிழ் விக்கிபீடியா CD ன்னு சொல்ல இன்னும் குறைந்தது ஒருவருசம் வேனும் போல. தமிழர்களின் பங்களிப்புகள் மிக குறைவு என்று மிகவும் வருத்தப்படுகிறார்கள் விக்கிபீடியர்கள்.

குறைந்தபட்சம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட தகவல்களையாவது முதலில் மொழியாக்கம் செய்வதில் உங்கள் பங்களிப்பை செய்யலாமே.


தொடுப்பு:
http://www.soschildrensvillages.org.uk/charity-news/education-cd.htm
http://en.wikipedia.org/wiki/2006_Wikipedia_CD_Selection

Note:

You are free to distribute this content.... but requested to include this blog http://techtamil.blogspot.com


5 Comments:

At 11/29/2006 9:47 PM, Blogger நற்கீரன் said...

Random விக்கி தொகுப்புக்கான நிரல்களை நீங்கள் கட்டற்ற முறையில் பகிர விரும்புவீர்களா? மிக்க நல்ல ஒரு நிரல். பலர் தங்களின் தமிழ் வலைப்பதிவுகளில் பயன்படுத்த முனைவார்கள். நீங்கள் கட்டற்ற வகையில் நிரல்களைப் பகிர்ந்தால் தங்களுக்கு ஏற்ற முறையில் மாற்றி பயன்படுத்த முனையும். நன்றி.

 
At 11/29/2006 9:51 PM, Blogger நற்கீரன் said...

'வாவ்! இன்னம்.' என்றல்லவா வரவேண்டும்?

 
At 11/30/2006 12:57 PM, Blogger அறிஞர். அ said...

அன்பின் நற்கீரன் அவர்களின் வருகை மிக்க மகிழ்ச்சியை தந்தது. மிக்க நன்றி.

//Random விக்கி தொகுப்புக்கான நிரல்களை நீங்கள் கட்டற்ற முறையில் பகிர விரும்புவீர்களா? //

சிறிது கால அவகாசம் தரலாம் தானே?. http://techtamil.in வழியாக செய்து தருகிறேன். அதுவே எனது ஆசையும் விருப்பமும் கூட.

விக்கிபீடியாவின் மேலாளர்களில் ஒருவரான தாங்கள் மேற்கொண்டு அளிக்கும் ஆலோசனை எனக்கு மிக்க பயனளிக்கும்.

நன்றி.

 
At 12/01/2006 8:20 AM, Blogger நற்கீரன் said...

மிக்க நன்றி மாஹிர். இயன்றவரையில் உதவ தயார்.

பார்க்க:
http://ta.wikipedia.org/wiki/Wikipedia:தமிழ் விக்கிபீடியா அறிமுகப்படுத்தல்

 
At 12/09/2006 3:21 AM, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாஹிர், உங்களின் இந்த வலைப்பதிவு என் கூகுள் ரீடரில் இணைத்திருக்கிறேன். சில இடுகைகளை பொதுப் பார்வைக்கும் வைத்திருக்கிறேன். தொடர்ந்து இது போன்ற தொழில்நுட்பக் குறிப்புகளை எழுதுங்கள்.

 

Post a Comment

<< Home