Saturday, March 29, 2008

தமிழர் வாக்கு 1.0

தமிழ் வலைப்பதிவுகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் தமிழர் வாக்கு. மூன்றே இரண்டே படிகளில் வாக்குப் பெட்டியை உருவாக்கிக்கொள்ளலாம்.

வலைப்பதிவுகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், வலைமனைகளிலும் பொருத்திக்கொள்ளலாம்

மேம்படுத்தப்பட்ட இந்த வெளியீட்டில் என்னென்ன விசேஷங்கள் என்று பார்ப்போம்.

1. ரகசிய வாக்கெடுப்பு; வாக்கு முடிவுகளை யாரும் பார்க்காமல் தடுப்பது (உருவாக்கியவரைத் தவிர)
2. ஒன்றுக்கும் மேற்பட்டவைகளை தேர்ந்தெடுத்தல்
3. நீங்கள் உருவாக்கிய முந்தய வாக்குகளுக்கு தொடுப்பு
4. வலைமனையில் ஒரே இடத்தில் இருக்கட்டும், ஒவ்வொரு வாக்கெடுப்புக்கும் நிரலை வெட்டி ஒட்டிக்கொண்டிருக்கவேண்டியதில்லை, ஒரு முறை பொருத்தினால் போதுமானது. கடைசியாக உருவாக்கிய வாக்கு வந்துவிடும் (mypolls பக்கத்தை பார்க்கவும்).
5. வாக்கு உருவாக்கியப் பிறகு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலை சோதித்து அனுமதி தொடுப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

உங்கள் வலைப்பதிவிற்கு வாக்குப் பெட்டி வேண்டுமா? தமிழர் வாக்கு பக்கத்திற்கு செல்லுங்கள்

முந்தய வாக்குப் பட்டியல்

Labels: , ,

Thursday, March 06, 2008

இளைஞர்களுக்கு வழி விடவும்

இன்றைக்கு நல்ல 'போ'னி,
அட இதிலயும் ஒரு அரசியல் வாதி வர்ராறுங்கோ, அவருக்கு இன்னொருத்தர் வழி விடனும்ங்க அவ்ளோதான்,


21ம் நூற்றாண்டின் வாழும் 23ம் புலிகேசி வரார், பராக், பராக், பராக்....



உலக மகா காமெடியன்றது இதுதானுங்களா?

Labels: ,

Monday, February 18, 2008

ஒலி/ஒளி, புகைப்படம், அன்புடன் அறிமுகம்...


தானியங்கி முறையில் திரட்டப்படும் பதிவுகளிலிருந்து புகைப்படம், ஒலி/ஒளி கோப்புகள் திரட்டப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.


இது கூகிள் செய்தி போன்ற பக்கம் ஒன்று உருவாக்க வேண்டும் என்கிற உந்துதலின் பேரில் நடந்த முயற்சியின் விளைவாக கிடைத்தது.


youtube போன்றவற்றில் உள்ள குறிச்சொற்களைவிட வலைப்பதிவுகளில் வரும் குறிச்சொற்களினால் வரும் பயன்களில் முந்தயது அனானியாக வரும் குறிச்சொற்கள், பிந்தயது பொறுப்புடன் கூடியக் குறிச்சொற்கள்.


ஒரே கல்லில் மூன்று (ஒலி, ஒளி, புகைப்படம்) மாங்காய்.


அன்புடன்:




இணைய கவிஞர்களை உற்சாகப்படுத்தி வளர்த்தெடுப்பதற்காகவே ஒரு குழுமமா என்று எண்ணுமளவிற்கு கடந்த மூன்றாண்டுகளாக சுமார் 800+ உறுப்பினர்களுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது "அன்புடன் குழுமம்". கவிதை மட்டுமின்றி தமிழார்வலர்கள் பலர் இக்குழுமத்தில் இணைந்து பல்சுவை தகவல்களை வாரிவழங்கி வருகின்றனர். ஒருவர் தன்னுடைய படைப்புகளை அனுப்பினால் அவருக்கென்று ஒரு இலையை உருவாக்கி அவரை மேலும் எழுதத்தூண்டும் இதன் நிர்வாகிகள். இப்படிப் பல...அதன் மடல்களை தமிழூற்றின் முகப்புப் பக்கத்தில் இன்றையப் பதிவுகள் அருகில் (டேப்) காட்சிப்படுத்துவதில் மகிழ்ச்சி.

http://techtamil.in
http://techtamil.in/feed/anbudan


பதிவுகளை இணைக்க:


குறிச்சொற்களைக் அடிப்படையாகக் கொண்ட தமிழூற்று தளத்தில் பதிவுகளை இணைப்பதால் அதன் சேவைகளை பெறலாம். குறிப்பாக குறிச்சொல் மேகம், குறிச்சொற்களுடனான ஓடைகள் போன்றவை.



அதில் உங்கள் பதிவுகளை இணைக்க http://techtamil.in/addblog.php பக்கத்திற்கு செல்லுங்கள்

குறிப்பு:


1. உங்கள் ஓடையின் முழு முகவரியையும் கொடுக்கவும். உதாரணமாக http://techtamil.in/atom.xml , வெறும் http://techtamil.blogspot.com என்று கொடுத்தால் போதாது.


2. வேர்ட்பிரஸை இணைக்க http://techtamil.wordpress.com/wp-rss.php என்று கொடுக்கவும்.

Labels: , , , , ,

Sunday, January 06, 2008

தமிழர் வாக்கு (beta) அறிவிப்பு

வெகு சிலரே பயன்படுத்தி வந்தாலும்....

தமிழர் வாக்கு உருவாக்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். ஆனால் சற்றுமுன் உபயோகித்தப் பிறகுதான் சிலருக்கு தெரிய வந்திருக்கிறது. சர்வேசன் பதிவுகளில் சர்வே எடுத்ததை பார்த்தப்பிறகுதான் ஏற்கெனவே ஒளித்து வைத்திருந்ததை வெளியிட்டேன். துரதிருஷ்டமாக வெகுசிலரே பாவித்து வருகின்றனர்.

சரி அந்த வெகுசிலருக்காகவே, அடுத்த தமிழர் வாக்கு v1.0 வர இருக்கிறது. அதில் Checkbox, radio options ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், ஓட்டு முடிவுகளை மறைத்து வைத்து நீங்கள் மட்டும் பார்க்கலாம். குறிப்பிட்ட நாளுக்குப் பின் ஓட்டெடுப்பை தானாகவே நிறுத்தி முடிவுகளை காண்பிக்கலாம்.

ஆகவே ஏற்கெனவே உள்ள உங்கள் ஓட்டு முடிவுகளை screenshot எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் முந்தைய நிரல்களும், டேபிள்களும் தற்பொழுது எனக்கு பயன் தரவில்லை ஆகையால் அவற்றை களைய வேண்டியுள்ளது....


9-ஜனவரி-08(19hrs IST) க்குப் பின் அவை கிடைக்கப்பெறாது. அத்துடன் உங்கள் வலைத்தளங்களில் உள்ள நிரல்துண்டுகளில் "தவறான உள்ளீடு" என்று காட்டக்கூடும்.
தமிழர் வாக்கு v1.0 வந்தபின் மீண்டும் புதிய வாக்கெடுப்பை உருவாக்கிக்கொள்ளலாம்.

அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்...நன்றி

Labels: ,

openid என்றால் என்ன?

பல்வேறு தளங்களுக்குச் செல்லும் போது ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து புகுபதிகை (லொகின்) செய்ய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு தளத்திற்கான புகுபதிகை தகவல்களை சேமித்து/நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக வேண்டி சில சேவை வழங்கிகளையும் நாட வேண்டியிருக்கிறது. இந்த தொல்லையை நீக்க வந்திருப்பதுதான் openid

What is openid- ஓப்பன் ஐடி என்றால் என்ன?

ஓப்பன் ஐடி என்கிற இந்த நுட்பம் தற்பொழுது பிறபல்யம் ஆகி வருகிறது. ஓப்பன் ஐடி என்பது பல்வேறு தளங்களில் உள்ள பயனர் கணக்கு திறக்கும்போது/புகுபதிகை செய்யும்போது ஒரே அடையாளம், பாஸ்வேர்ட், போன்றவற்றை நம்பிக்கையான ஒரு ப்ரோவைடர்(வழங்குபவர்) மூலம் authentication பெற்று பல்வேறு தளங்களில் உள்நுழைய பயன்படுகிறது.


(openid.net) என்கிற முறை, அதாவது authentication (பயனர் கணக்கை சரிபார்த்தல்) வேறுறொரு தளத்தில் (ப்ரோவைடர்) நடைபெறுகிறது. பல்வேறு தளத்திற்கும் இந்த ஒரே ப்ரோவைடரையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதில் ஓப்பன் ஐடியாக தற்பொழுது ப்ரொவைடர்கள் இணைய முகவரிகளை தருகிறார்கள். உதாரணமாக வேர்ட்பிரஸ் ஒரு ஓப்பன் ஐடி ப்ரோவைடர், நமக்கு
வேர்ட்பிரஸில் கணக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதில் நமக்கு ஒரு வலைப்பதிவு முகவரியும் ஒன்று இருக்கும். உதாரணமாக என்னுடைய வேர்ட்பிரஸ் முகவரி http://readmahir.wordpress.com

இப்பொழுது என்னுடைய ஓப்பன் ஐடி முகவரி readmahir.wordpress.com (no http://www.)

சரி இப்பொழுது ஓப்பன் ஐடி சப்போர்ட் செய்யும் தளத்திலிருந்து எப்படி உள்நுழைவது.

1. உங்கள் ஓப்பன் ஐடி கொடுக்கவும்.
2. உங்கள் ஓப்பன் ஐடி ப்ரோவைடரின் வலைதளத்தின் புகுபதிகை பக்கத்திற்கு உங்களை எடுத்துச்செல்லும் (எடுத்துச்செல்லனும், இல்லையேல் பிஸ்ஸிங்காக இருக்க வாய்ப்புண்டு)
3. இன்னொருமுறை url சரிபார்த்துக்கொள்ளவும், (அதாவது eg http://wordpress.com/wp-signup.php என்று இருக்கிறதா என்று)
4. அங்கு அத்தளத்தில்(ப்ரோவைடர், வேர்ட்பிரஸ்) நீங்கள் ஏற்கெனவே புகுபதிகைக்கான விவரம் உங்களிடம் இருக்கும். உங்கள் லொகின், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும்.
5. புகுபதிகை வெற்றியடைந்தவுடன், (wordpress login success) உங்கள் முந்தைய தளத்திற்கான முகவரி கிடைக்கும்.

போலி ஓப்பன் ஐடி(பிஸ்ஸிங்-phishing)(ஜாக்கிரதை):

பாஸ்வேர்டை கேட்டால் எஸ்கேப் ஆயிடுங்க!


---------------
ப்ளாக்கர் பின்னூட்டத்தில் தற்போது ஓப்பன் ஐடி கேட்பதால் இப்பதிவு.
அத்துடன் முக்கியமாக இந்த ஓப்பன் ஐடி புதிய நுட்பமாக இருப்பதால் அநேக வாசகர்கள்/ பயனர்கள் அது தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை பயன்படுத்தி phishing எனப்படும் போலித் தளங்கள் உருவாகி உங்கள் பயனர்கணக்குகளை சூறையாட வாய்ப்பிருப்பதால் இப்பதிவு.


(பிஸ்ஸிங் பற்றி அனைவரும் தெரிந்திருப்போம். பிரபலமான இணையதளத்தின் பக்க வடிவமைப்பை போன்று பயனர் புகுபதிகை செல்லும் பக்கம் உருவாக்கப்பட்டிருக்கும். நாமும் நாம் வந்த அந்த பிரபலமான (யாகூ,கூகிள் எட்ச்...)தளம் இதுதான் என்று நினைத்து username,password கொடுப்போம். ஆனால் அந்த பக்கமோ போலி என்பதால் நம்முடைய பாஸ்வேர்ட் களவு போயிருக்கும்)

உங்கள் வாசகர்கள்/பயனர்களுக்கு ஓப்பன் ஐடி பற்றி அறியத்தாருங்கள்.

Reference:
Beginner's guide to OpenID phishing
http://en.wikipedia.org/wiki/Openid

இதுசம்பந்தமாக இன்னும் படிக்க வேண்டி இருக்கிறது...

Please free to distribute this post...

Labels: ,

Thursday, October 25, 2007

புதிய கருவிகள்

தமிழூற்று தளம் கடந்த ஒரு ஆண்டு நிறைவுக்குப்பின் சற்று தான் எனக்கு திருப்திகரமாக இருக்கிறது.

இரண்டு புதிய கருவிகள் உருவாக்கியிருக்கிறேன். இரண்டும் வலைப்பதிவுகளுக்கு முக்கியமானவை.

தொடர்புடைய குறிச்சொற்கள்:

புத்தகத்திற்கு index கோர்ப்பது போல் குறிச்சொற்களுக்கு index இந்த 'தொடர்புடைய குறிச்சொற்கள்' பக்கம்.... இதில் பயனர்கள் குறிச்சொற்களைச் சேர்க்கவோ, நீக்கவோ-pending முடியும்...இதில் சேர்ப்பவர்/நீக்கியவர் பற்றிய விவரங்கள் சேகரிக்கலாம்.

http://techtamil.in/relatedtags/இந்தியா

தொடர்புடைய வலைப்பதிவுகள்:(feedcloud)

குறிப்பிட்ட குறிச்சொற்களுக்கு எந்த வலைப்பதிவில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் கருவிதான் இது.

http://techtamil.in/feedcloud/அரசியல்

மற்ற மாற்றங்கள்...

1. முகப்புப் பக்கத்தில் 'இன்றையப் பதிவுகளில் ஒவ்வொரு முறையும் அடுத்து சொடுக்கும்போது மறுமுறை 'முந்தய' பக்கத்திற்கு செல்ல அவை திரும்பவும் சர்வருக்குச் செல்லவேண்டியதில்லை...அவை உடனுக்குடன் முந்தய பக்கங்களைப் பார்க்கலாம்...அதேபோல் அடுத்த பக்கமும் ஏற்கெனவே பார்த்திருந்தால் திரும்பவும் செர்வருக்குச் செல்லவேண்டாம்...

2. குறிச்சொற்களில் space விட்டு வரும் குறிச்சொற்கள் முதலில் பிறகு அவை ஒத்த குறிச்சொற்களுக்கான தொடுப்புகள் கிடைக்கும் படி செய்திருக்கிறேன்.

உதா. http://techtamil.in/tag/பெண்கள் அனுபவம் பக்கத்தில் முதல் தொடுப்பு பெண்கள் அனுபவம் தொடர்பான தொடுப்பு மற்றவைகளில் பெண்கள் என்றோ, அனுபவம் என்றோ இருக்கலாம்.

கூகிள் தமிழ் தேடல்களில் தமிழூற்றுத் தளத்தை பயன்படுத்திக்கொள்கிறது.தினமும் சுமார் ஆயிரம் வார்த்தைகளை அது இந்த தளத்தில் தேடுகிறது.

Labels: ,

Tuesday, July 31, 2007

அரை மணிநேரத்தில் வருமானவரி தாக்கல்...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று (31/07/2007) வெற்றி கரமாக நான் தாக்கல் செய்துவிட்டேன்...
0. http://www.incometaxindiaefiling.gov.in/portal/index.jsp செல்லவும்.
1. நீங்கள் சம்பள ஊழியராக இருப்பின் ITR-1 பாரத்தை தேர்ந்தெடுக்கவும். இதற்கு மற்ற எந்த ஆவணங்களும்(உதா. பாரம் 16, 16அ ) தேவையில்லை.
2. Download Return Preparation Software for selected Return Form. தொடுப்பை சொடுக்கி ITR-1
பக்கத்திற்கு பிடி எப் பக்கத்திற்கு சென்று உங்கள் வருமான விவரங்களை உள்ளீடவும்.
3. உங்கள் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாரம் 16 ல் உள்ளபடிக்கு விவரங்களை பூர்த்திசெய்யவும்.
4. நீங்கள் உள்ளீடு செய்தப் பிறகு "Check form" என்கிற பொத்தானை சொடுக்கி சரிபார்க்கவும். தவறுகள் இருந்தால் திருத்தவும்.
5. Generate bar code பொத்தனை அழுத்தவும்.
6. Export to XML பொத்தானை அழுத்தவும், பிறகு .xml என்கிற கோப்பை கணினியில் சேமிக்கவும்.

7. பிறகு மறுபடியும் http://incometaxindiaefiling.gov.in
பக்கத்திற்கு வந்து லாகின் செய்தப் பிறகு Submit return என்கிற பொத்தானை அழுத்தவும்.

8.சேமித்த xml கோப்பை browse கொடுத்து submit செய்யவேண்டியது தான்.
9. இறுதியாக உங்களுக்கு ITR-V சான்றிதழ் பாரம் கிடைக்கும். அவற்றை பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவும்.

சொதப்பல்:
XML கோப்பை அப்லோட் செய்யும்பொழுது பிறந்த தேதி சொதப்பியது... அவற்றை ஒருவாறு ஊகித்தவாறு notepad திறந்து மாற்றம் செய்து அனுப்பினேன்.

****-MM-**
இவற்றில் **** வருடமும். MM=01, **01
கொடுத்தேன்.





Note: above images are for publics to get utilized and pay their tax on date. If displaying above images (with govt logos) are illegal please post a comment quoting the laws related to it.

Labels: , ,

Sunday, July 15, 2007

தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொல் அடைவு (மாற்றப்பட்டது)

தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொல் அடைவு (Tags directory) ஒருவகையில் தமிழூற்று தளத்திற்கு பெயர் வாங்கித்தந்தது. தமிழ்மணம் அதனை அங்கீகரித்து தனது முகப்புப் பக்கத்தில் தினமும் தெரியும்படிக்குச் செய்தது. தமிழ்மணத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

விக்கி [ http://vicky.in/dhandora ]என்கிற விக்னேஷும் அதனைப்பற்றி எழுதியதோடல்லாமல் அதனை மேம்படுத்தும்படி ஆலோசனைச் சொன்னார்.

கடந்த சில நாட்களாக JSON என்னும் புதிய data interchange நுட்பத்தில் அதீத ஆர்வம் காட்டிவருவதால் அதன் பயன்களை இத்தளத்தில் சிறுகசிறுக ஏற்றிவருகிறேன்.

இந்த புதிய பக்கத்தில் குறிச்சொற்களை தேடுவதும். (by character search) மற்றும் பக்கம் பிரித்து அவைகளை பார்வையிடுவதும் Client side செய்வது JSON என்னும் நுட்பத்தால் முடிகிறது. அந்த நுட்பத்தை இதில் நுழைத்திருக்கிறேன்.

பக்க முகவரி:http://techtamil.in/tagsdirectory.php

Features in short:
1. Client side tag searching
2. Client side paging
3. Fast download (due to caching)

I will update about client side paging in my english blog http://madbygoogle.blogspot.com

--------------
குறிச்சொல் மேகம் Tips/updates
1. உங்கள் ப்ளாக் பெயர் புள்ளி சேர்த்துபெற வேண்டுமெனில்
http://techtamil.in/tagcloud.php?feed=blogname.blogspot.com என்று கொடுக்கலாம். மற்ற எல்லா querystring அப்படியே இருக்கட்டும்
2. சில மேகங்களில் எழுத்துருக்களின் தடிமானம் அதிகமாக இருக்கலாம் இவற்றை குறைக்க/கூட்ட maxfontweight/minfontweight என்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.