Tuesday, July 31, 2007

அரை மணிநேரத்தில் வருமானவரி தாக்கல்...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று (31/07/2007) வெற்றி கரமாக நான் தாக்கல் செய்துவிட்டேன்...
0. http://www.incometaxindiaefiling.gov.in/portal/index.jsp செல்லவும்.
1. நீங்கள் சம்பள ஊழியராக இருப்பின் ITR-1 பாரத்தை தேர்ந்தெடுக்கவும். இதற்கு மற்ற எந்த ஆவணங்களும்(உதா. பாரம் 16, 16அ ) தேவையில்லை.
2. Download Return Preparation Software for selected Return Form. தொடுப்பை சொடுக்கி ITR-1
பக்கத்திற்கு பிடி எப் பக்கத்திற்கு சென்று உங்கள் வருமான விவரங்களை உள்ளீடவும்.
3. உங்கள் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாரம் 16 ல் உள்ளபடிக்கு விவரங்களை பூர்த்திசெய்யவும்.
4. நீங்கள் உள்ளீடு செய்தப் பிறகு "Check form" என்கிற பொத்தானை சொடுக்கி சரிபார்க்கவும். தவறுகள் இருந்தால் திருத்தவும்.
5. Generate bar code பொத்தனை அழுத்தவும்.
6. Export to XML பொத்தானை அழுத்தவும், பிறகு .xml என்கிற கோப்பை கணினியில் சேமிக்கவும்.

7. பிறகு மறுபடியும் http://incometaxindiaefiling.gov.in
பக்கத்திற்கு வந்து லாகின் செய்தப் பிறகு Submit return என்கிற பொத்தானை அழுத்தவும்.

8.சேமித்த xml கோப்பை browse கொடுத்து submit செய்யவேண்டியது தான்.
9. இறுதியாக உங்களுக்கு ITR-V சான்றிதழ் பாரம் கிடைக்கும். அவற்றை பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவும்.

சொதப்பல்:
XML கோப்பை அப்லோட் செய்யும்பொழுது பிறந்த தேதி சொதப்பியது... அவற்றை ஒருவாறு ஊகித்தவாறு notepad திறந்து மாற்றம் செய்து அனுப்பினேன்.

****-MM-**
இவற்றில் **** வருடமும். MM=01, **01
கொடுத்தேன்.





Note: above images are for publics to get utilized and pay their tax on date. If displaying above images (with govt logos) are illegal please post a comment quoting the laws related to it.

Labels: , ,

Sunday, July 15, 2007

தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொல் அடைவு (மாற்றப்பட்டது)

தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொல் அடைவு (Tags directory) ஒருவகையில் தமிழூற்று தளத்திற்கு பெயர் வாங்கித்தந்தது. தமிழ்மணம் அதனை அங்கீகரித்து தனது முகப்புப் பக்கத்தில் தினமும் தெரியும்படிக்குச் செய்தது. தமிழ்மணத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

விக்கி [ http://vicky.in/dhandora ]என்கிற விக்னேஷும் அதனைப்பற்றி எழுதியதோடல்லாமல் அதனை மேம்படுத்தும்படி ஆலோசனைச் சொன்னார்.

கடந்த சில நாட்களாக JSON என்னும் புதிய data interchange நுட்பத்தில் அதீத ஆர்வம் காட்டிவருவதால் அதன் பயன்களை இத்தளத்தில் சிறுகசிறுக ஏற்றிவருகிறேன்.

இந்த புதிய பக்கத்தில் குறிச்சொற்களை தேடுவதும். (by character search) மற்றும் பக்கம் பிரித்து அவைகளை பார்வையிடுவதும் Client side செய்வது JSON என்னும் நுட்பத்தால் முடிகிறது. அந்த நுட்பத்தை இதில் நுழைத்திருக்கிறேன்.

பக்க முகவரி:http://techtamil.in/tagsdirectory.php

Features in short:
1. Client side tag searching
2. Client side paging
3. Fast download (due to caching)

I will update about client side paging in my english blog http://madbygoogle.blogspot.com

--------------
குறிச்சொல் மேகம் Tips/updates
1. உங்கள் ப்ளாக் பெயர் புள்ளி சேர்த்துபெற வேண்டுமெனில்
http://techtamil.in/tagcloud.php?feed=blogname.blogspot.com என்று கொடுக்கலாம். மற்ற எல்லா querystring அப்படியே இருக்கட்டும்
2. சில மேகங்களில் எழுத்துருக்களின் தடிமானம் அதிகமாக இருக்கலாம் இவற்றை குறைக்க/கூட்ட maxfontweight/minfontweight என்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

Friday, July 13, 2007

குறிச்சொல் மேகம் உருவாக்கும் கருவி

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் குறிச்சொல் இட்டு தலைப்புகள் எழுதியிருப்பீர்கள். அவற்றில் குறிப்பிட்ட குறிச்சொல்லின் கீழ் அதிகமான கட்டுரைகள் எழுதியிருப்பீர்கள். நீங்கள் எப்பிரிவின் கீழ் அதிகம் எழுதியிருக்கிறீர்கள் என்பது எண்களை வைத்து சொல்வதைவிட அதன் வார்த்தையின் தடிமானத்தை (font size) வைத்து சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம்.

இவற்றை உருவாக்க பிரபல்யமான தளங்கள் இருக்கின்றன. ஆனால் அவைகளில் தமிழ் எழுத்துருக்கள் சரிவர தெரிவதில்லை.

கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் பெயரை கொடுத்து உருவாக்கிக்கொள்ளலாம்.

இந்த குறிச்சொல் மேகத்தின் சிறப்பு, பக்கம் பிரிப்பதுதான் (page navigation) அதுவும் client sideல் செய்வதால் அதிவேகமாக அடுத்த பக்கத்தை பார்க்கமுடியும். அடுத்த பக்கத்திற்கு செல்ல server க்கு செல்லாது.

முகவரி:
http://techtamil.in/tagcloud




இவை சற்று மிக வேகமாக செயல்படக்கூடியது.

Noted Bugs/expected features:
1. URL with ending / will not get the page as http://techtamil.in/tagcloud/
2. Box Border color cannot have hexadecimal values with #

மேலும்: I have a post on JSON and Client side Navigation and how i created & implemented in this program at my never used blog http://madbygoogle.blogspot.com

குறிப்பு:
ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை இருக்கும். ஹிஹி...தவறான குறிச்சொற்களைச் சொன்னேங்க...அப்படி நீங்கள் கண்டால் தயவுசெய்து அறியத்தாருங்கள்.


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 3.0 License.

Labels:

Tuesday, July 10, 2007

enough is enough

"போதும்டா உன் ஆட்டத்தை நிறுத்து", பொறுமைக்கும் எல்லை உண்டு.

குறிச்சொல் திரட்டி ஆரம்பகட்டத்தில் இருப்பதால் புதிதாக சில "மராமத்து" (செப்பனிடும்) வேலைகள் செய்யும் பொழுது தவறுதலாக ஒரு டேட்டாபேஸ் டேபிளை ட்ரங்கேட் (truncate) செய்துவிட்டேன். அதன் விளைவுதான் தவறான குறிச்சொற்கள்.

இது திரட்டியின் கோளாறல்ல but human mistake.

தற்காலிகத் தீர்வாக:

தவறான குறிச்சொற்கள் தயவுசெய்து அறியத்தந்தால் பேரூதவியாக இருக்கும்.
அறியத்தரும்பொழுது மறக்காமல், பதிவின் முகவரியும், தவறான/தொடர்பில்லாத குறிச்சொற்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு, admin_at_techtamil.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

நன்றி:
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குறிச்சொல் தேடல் பக்கத்தில் ஆறாயிரம்(6000) வார்த்தைகளும் அதற்கான 17000 பக்கங்களும் பார்வையிடப்பட்டுள்ளன.

வலைப்பதிவர்கள், வருகையாளர்களுக்கு தமிழூற்றின் உளமார்ந்த நன்றி.

Sunday, July 01, 2007

குறிச்சொல் ஊற்று அறிமுகம்

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வலைப்பதிவுகளை பிரித்தறிவது இன்றிமையாததாகிவிட்டது. வலைப்பதிவுகளில் இடப்பட்டிருக்கும் குறிச்சொற்கள் மூலம் அப்பதிவில் எவைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் என்று ஓரளவேனும் அனுமானிக்கலாம்.

இவற்றை கருத்தில் கொண்டு குறிச்சொற்கள் மூலம் தேடுவதும், ஊற்றுக்களை உருவாக்கி அதன் ஓடைகளை பெறுவதற்காக வேண்டி இப்பக்கம்
http://techtamil.in/ தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளிலிருந்தும் ஊற்றை உருவாக்க முடியும். அல்லது குறிப்பிட்ட வலைப்பதிவுகளைத் தவிர்த்து ஏனையவற்றிலிருந்தும் பெறலாம்.

ஊற்று உருவாக்குதலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
1. குறிச்சொல் ஊற்று:
  • தனித்தனியாகவோ, சேர்த்தோ உருவாக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்டவையாயின் கமா(,) அல்லது ஸ்பேஸ் (space) சேர்த்துக்கொள்ளவேண்டும்
  • குறிப்பிட்ட வலைப்பதிவுகளிலிருந்து மட்டும் வேண்டுமாயின்

http://techtamil.in/tag/உலகம்?isxml&searchmethod=1&txt_feed=FEEDNAME

குறிப்பு: FEEDNAME என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் வலைபதிவுகளைச்சேர்க்கலாம்.

2. வலைப்பதிவு ஊற்று

  • தனித்தனியாகவோ, சேர்த்தோ உருவாக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்டவையாயின் கமா(,) அல்லது ஸ்பேஸ் (space) சேர்த்துக்கொள்ளவேண்டும்
http://techtamil.in/feed/FEEDNAME?isxml&searchmethod=1&txt_tag=TAGNAME

வழுக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. அப்படியே மற்றக்காம உபயோகித்த பிறகு ஓட்டும் போடுங்க


Labels: , ,