Wednesday, February 21, 2007

கூகிள் அரட்டையில் தமிழ் விக்சனரி

கூகிள் அரட்டையில் விக்சனரி தேடல் தொடுப்புகள் உருவாக்கியிருக்கிறேன். அன்பர்கள் விக்சனரி தேடலை இனி அரட்டை அடிக்கும் பொழுதே தேடிக்கொள்ளலாம்.


thamizhootru@gmail.com முகவரியை நீங்கள் உங்கள் கூகிள் அரட்டையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதன் syntax: /wikt [word]

உதா. /wikt sup

இந்த கட்டளை கொடுத்தவுடன் sup ஒத்த வார்த்தைகளுக்கான ஐந்து தொடுப்புகள் கிடைக்கும். அதன் தொடுப்புகளை சொடுக்கி அதன் அர்த்தங்களை விக்சனரியில் பார்த்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:
1. gchat now group chat
2. I Love Googleபிப். 25ல் சென்னையில் விக்கி பட்டறை

விக்கி பட்டறை வருகிற ஞாயிறு 25-02-2007 அன்று சென்னை டைடல் பூங்காவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக விக்கிபீடியாவை உருவாக்கியவரான திரு ஜிம்போ வேல்ஸ் கலந்து கொள்கிறார்.

இந்த ஒருநாள் பட்டறையில் விக்கிபீடியா நுட்பங்கள் பற்றி பல்வேறு தலைப்புகளில் நிபுனத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் விளக்க உள்ளனர்.


விக்கிபீடியாவின் நுட்பங்களை அறிய விரும்புவோருக்கு இந்த பட்டறை நல்ல வாய்ப்பு.

விக்கி பற்றி சிறு குறிப்பு:

விக்கிபீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய கட்டற்ற களைக்களஞ்சியமாகும். விக்கிமீடியா ஸ்தாபனத்தின் வெளியீடுகளில் விக்கிபீடியா, விக்சனரி, விக்கிசெய்தி, விக்கிநூல்கள், விக்கிமூலம் மற்றும் விக்கி இனங்கள் ஆகியவைகள் உள்ளன. விக்கிமீடியா ஸ்தாபனம் விக்கிபீடியாவிற்கு உபயோகிக்கும் மென்பொருளை இலவசமாக உபயோகித்துக்கொள்ள பொதுவில் விட்டுள்ளது.


விக்கி பட்டறையின் தள முகவரி: http://www.wikicamp.in
Thursday, February 15, 2007

gchat now group chat

இப்பொழுது அநேகமாய் நம்ம எல்லோரும் ஜிமெயில் அரட்டை உபயோகித்து வருகிறோம். ஆனால் குழுவாய் அரட்டை அடிக்கும் வசதி இதுவரை இல்லை. இப்பொழுது இதனை தமிழூற்று மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கூகிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல. (NOT GOOGLE's OFFICIAL ANNOUNCEMENT)


இதில் சேர்ந்து குழுவாய் அரட்டை அடிக்க:

1. ஜிமெயில் முகவரி: thamizhootru@gmail.com சேர்த்துக்கொள்ளுங்கள்.
2. உடனே thamizhootru ஆன்லைனில் இருக்கப்பார்பீர்கள்.
3. அதில் "ஹாய்" என்று டைப் செய்ய நண்பர்கள் உங்களை வரவேற்பார்கள்.
4. ஏற்கெனவே உள்ளவர்களை அறிய /names (அதாவது slash names என்று அதில் தட்டச்சிட வேண்டும்)
5. முற்றிலும் வெளியேற /quit என்று டைப் செய்யவேண்டும். (மீண்டும் இனைய மேலிருந்து படிக்கவும்)
6. தொடர்ந்து இந்த அரட்டைமுகவரியை வைத்திருக்கவேண்டும் ஆனால் "சிறிது நேரம் அல்லது நாட்கள் என்னை தொல்லை செய்யவேண்டாம்" என்று நீங்கள் நினைத்தால் /nochat என்று உள்ளிடவும்.
7. no. 6 நீங்கள் தேர்வு செய்திருந்தால், தொடர விரும்புவதாயின் /chat என்று டைப் செய்யவும்.
8. குறிப்பிட்ட பயனருக்கு மட்டும் நீங்கள் செய்தி அனுப்ப /msg nickname message

ஆமாம் சார் அதுதான் ஏகப்பட்ட அரட்டை வசதிகள் இணையத்தில் இருக்குதே, கூகிள் வழியாக தருவதால் அப்படி என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்பது நமக்கு கேட்கிறது.

1. இனிய தமிழில் அரட்டை அடிக்கும் வசதி.
2. நம்ம அடிக்கும் அரட்டை ஜிமெயிலில் சேமிக்கும் வசதி

மற்ற முக்கிய சிறப்புகள்:


1. தமிழ் தளங்களுக்கான தொடுப்புகள் suggestions.
2. தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளுக்கான தொடுப்புகள்
3. உங்கள் ப்ளாக்கில் உள்ள தலைப்புகள் அதன் தொடுப்புகள்
4. இன்று, நேற்று, நாளை, அல்லது குறிப்பிட்ட நாளில் வெளியான தலைப்புகள் மற்றும் அதன் தொடுப்புகள்இவை அனைத்தும் ஜிமெயில் விண்டோவில் என்பது சற்றே ஏற்றுக்கொள்ள அல்லது நம்பமுடியாத ஒன்றாய் இருக்கிறதா? உடனே சோதித்துப் பாருங்கள்... thamizhootru@gmail.com


இதனைக்கொண்டு....


1. உடனுக்குடன் தமிழ் இணைய உதவிகள் வழங்கலாம் / பெறலாம்.
2. உடனுக்குடனான வலைப்பூ செய்திகளை படிக்கலாம், குறிப்பிட்ட வலைப்பூவில் உள்ள தலைப்புகளை பார்க்கலாம்
3. தங்கள் படைப்புகள், ஆக்கங்களுக்கான தொடுப்புகளை பறிமாறிக்கொள்ளலாம்.
4. உலகெங்கிலும் உள்ள தமிழ் வலைப்பதிவர்களுக்கான சந்திக்கும் இடமாக, கருத்து, செய்தி சேகரிக்கும் இடமாக ஆக்கிக் கொள்ளலாம்.
5. புதிதாய் நட்பு பாராட்டலாம்.


இன்னும் பல...

Labels: ,

Wednesday, February 14, 2007

I Love Google!!

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்னு திருக்குறளை பிரிப்பது மாதிரி, குறிப்பால் சொல்லனும்னா நமக்கு கூகிள்பால் ஈர்ப்பு உண்டு. கூகிள் நமக்கு அறிவுப்பால் கொடுத்து கொம்பெனிகளில் பொறுப்பா(ல்) நடந்துக்க உதவுதே.


சில புறநானூற்றில் வரும் காதல் சமாச்சாரங்களும் என்னாலான விளக்கமும்:

கைக்கிளை - ஒருதலைக்காதல், வயதில் மூத்த பெண்ணை காதலிப்பது. கள்ளக்காதல் கூட இதில் வருமாம்.

பசலை - நாட்கணக்கில் தன் புருஷனை விட்டு பிரிந்து விட்ட பெண்டிருக்கு ஏக்கத்தினால் வரும் ஒருவித நோய்.

(ஊருக்கு - கிராமத்திற்கு சென்றவுடன் அங்கு இணையம் இல்லாமல் இருப்பது, கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்றவைகளை கூகிளில் தேட இணைய வசதி இல்லாமையால் நாட்கணக்கில் கூகிளை பார்க்க முடியாமல் போவது அதனால் ஏற்படும் நோய்)

ஊடல் - செல்லக்கோபம், உண்மையில் கோபமே இராது ஆனால் கோபப்படுவது போல் காட்டிக்கொள்வது. நட்பும் ஊடலும் ஒன்றாகாது.

(கூகிள் மேல் கோபப்படுவது போல் பாவ்லா காட்டி MSN சென்று அங்கு "கூகிள் செய்தி" என்று தட்டச்சிடுவது) ...விசயத்திற்கு வருகிறேன்...

கூகிள் அரட்டையில் இப்பொழுது குரூப் அரட்டை, தமிழ் விக்கிபீடியா/feed/sites suggestions:


1. இது கூகிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல, ஆயினும் இது போன்று செய்வதை கூகிள் ஊக்கப்படுத்துவதாக அதன் தளத்திலிருந்து அறிய முடிகிறது.

2. thamizhootru@gmail.com என்கிற இந்த மின்னஞ்சலை கூகிள் சாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் "வணக்கம்" என்று டைப் செய்யுங்கால் இந்த conference ல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் உங்கள் "வணக்கம்" என்கிற செய்தி செல்லும்.இன்னொரு சிறப்பு ஜிமெயில் விண்டோவிலிருந்து கூட சாட் செய்யலாம்.

3. /help என்று டைப் செய்ய, சாட்டில் என்ன என்ன கட்டளைகள் கொடுக்கலாம் அதன் syntax போன்றவை கிடைக்கப்பெறுவீர்கள்.


4. /wiki [wikitext in tanglish] கொடுக்க முதல் பத்து விக்கிபீடியா கட்டுரைகளுக்கான தொடுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். உதா. /wiki ampuli என்று கொடுத்து எண்டர் கீயை அடிக்க \[அம்புலிமாமா\] - http://techtamil.in/show_wiki.php?id=2047

5. தமிழூற்றுக்கான கட்டளைகள் (உதா. wow:feed etc) எல்லாமே இதிலும் கொடுக்க முடியும். wow: என்பதற்கு பதிலாக இப்பொழுது "/" (without quotes) அதாவது /feed என்று கொடுக்க வேண்டும்.

குழு அரட்டை வசதி இதில் இருப்பதால் இதனை வலைப்பதிவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். இது 24x7 online ல் இருக்கும். வரம்பு மீறுபவர்களை தடை செய்யவும் இதில் வசதியுள்ளது. மேலாளர்கள் நியமிக்கப்பட்டு அரட்டை அடிப்பவர்களினது செயற்பாடுகள் கண்கானிக்கப்படும்.

அத்துடன் இது ஜிமெயில் என்பதால் நீங்கள் சாட் செய்வது எல்லோர் முகவரியிலும் தானாகவே சேமித்துக்கொள்ளவும் முடியும்.அப்பாடா நாமும் லவ்வ சொல்லியாச்சு!

Labels: ,

Monday, February 12, 2007

தேன்கூடு கல்யாண் மரணம்!!!

எனக்கு தேன்கூடு அவ்வளவு பரிச்சயம் கிடையாது. 4-5 மாதங்களுக்கு முன் தான் தேன்கூட்டில் என்னுடைய வலைப்பூவை இணைத்தேன். மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட தேன்கூட்டின் தள அமைப்பு எல்லோரையும் போல் என்னையும் கவர்ந்தது.

முகம் தெரியாத அவருடன் சமீபத்தில் தான் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கிடைத்தது. அதுவும் தேன்கூடு தளத்தை அவர் மேம்படுத்த எண்ணியிருந்ததை அறிய முடிகிறது.

தமிழூற்று கருவியை பதிவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல எண்ணி தேன்கூடு தளத்தை தொடர்பு கொண்டேன். வாழ்த்துச் செய்தியுடன் வந்த அவருடைய மின்னஞ்சல், உடனே அதனைப்பற்றி அறிவிப்பு பலகையிலும் இடம்பெறச்செய்தார்.

தேன்கூடு தளத்திற்காக இரண்டு விடயங்களையும் கேட்டிருந்தார்.

//Do you have a permanent link to a post//

எனக்கு இது சற்றே புரியாமல் இருந்தது அநேகமாய் இது caching பற்றி கேட்டிருக்கலாம்.

//we want to show a dynamic word of the day from the wiktionary page. //

என்னுடைய தளத்திலிருந்து வராமல் நேரடியாக விக்சனரி பக்கங்களிலிருந்து கொடுக்க முடியுமா என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

பத்து நாட்களாகியும் வேலைப்பளுவின் காரணமாக என்னால் பதில் அனுப்ப முடியாமல் போய்விட்டது.

ஆனால் அந்த பண்பாளர் தான் ஒருவாரம் கழித்து பதில் இட்ட பொழுது வருத்தம் தெரிவித்திருந்தார்.
சக வயதினரான அவருடைய மரணச்செய்தி எனக்கு கிடைக்க இருந்த ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டதாக எண்ணி ஆழ்ந்த துயருற்றேன்.

அவரைப்பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

Labels: , ,