Wednesday, January 31, 2007

தமிழூற்றில் கிரிக்கெட்


லைவ் கிரிக்கெட் கருவியை உங்கள் தளத்தில் நிறுவவேண்டுமா? அத்துடன் பல வசதிகள் கொண்ட கருவி ஒன்றையும் சேர்த்து நிறுவினால் என்ன?

இதற்காக தனித்தனியே நிறுவ வேண்டியதில்லை. தமிழூற்றில் இப்பொழுது கிரிக்கெட் ஸ்கோரையும் பார்க்கலாம்.

மட்டை வைத்திருப்பவரை சொடுக்குங்கள்...(ஏற்கனவே shockwave இல்லாவிடில் இன்ஸ்டால் செய்துகொள்ளவேண்டுமா என்று கேட்கும், install சொடுக்கிவிடுங்கள்.)

பதிவிறக்கம் செய்ய http://techtamil.in/download/thamizhootru.exe

Friday, January 26, 2007

தமிழ் வலைப்பூவிற்கு சிறிய செயலி


தமிழூற்றின் குடியரசு தின வாழ்த்துக்கள்!

வெளியீடு:

தமிழூற்றுத் தளத்தை உலாவியின்றியே தமிழூற்றில் உள்ள பன்னிரெண்டாயிரம் கட்டுரைகளை படிக்க ஏதுவாக இந்த சிறிய அளவு செயலியை வெளியிடுவதில் தமிழூற்று மகிழ்ச்சியடைகிறது.

பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Installation Notes:
NA, Just download and double click the exe file. thats it.
குறிப்பு: விண்டோஸ் 98 கணினிகளில் இயங்காது.

Monday, January 15, 2007

தமிழூற்றின் பொங்கல் வாழ்த்துக்கள்!

புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து கரும்பைத் தின்று (நன்றியுடன்) உழவர்களின் உழைப்பை உலகிற்கு உணர்த்தும் தமிழர்கள் திருநாளாம் தைப் பொங்கல் தின வாழ்த்துக்கள்.



எல்லோர் இல்லத்திலும் இனிப்பு(ப் பொங்கல்) வழங்கி கொண்டாடும் இந்நாளில், நான் உருவாக்கிவரும் தமிழ் கருவிக்கு (Say வாவ்(இன்னும்)) தமிழில் நல்ல பெயர் சூட்டி மகிழ்கிறேன். பெயர் சூட்டுவிழாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று யாரும் குறைபட்டுக் கொள்ளக்கூடாது. எல்லோர் வீட்டிலும் இன்று இனிப்புப் பொங்கல் செய்து தரும்படி தாய்மார்களை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழூற்றின் இனிமையான சிறப்புகளும் பயன்களும்:

1. ரீடர்:

  1. இணையத்தின் முதல் மினி ரீடர்
  2. ஆயிரத்திற்கும் மேற்பட்ட RSS ஊற்றுகள்.
  3. பதினொன்றாயிரம் கட்டுரைகள், தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் நாளொன்றுக்கு.
  4. கட்டுரைகளுக்கு விரும்பிய/பொருந்திய குறிச்சொற்களைச் சேர்க்கும் வசதி.
  5. குறிச்சொற்களைக்கொண்டு தேடும் வசதி
  6. குறிப்பிட்ட வலைப்பூவில் உள்ள கட்டுரைகளை மட்டும் பார்க்கும் வசதி
  7. இன்று, நேற்று, இந்தவாரம் அல்லது குறிப்பிட்டநாளில் வெளியான கட்டுரைகளை பார்க்கும் வசதி
2. விக்கிபிடீயா:
  1. பகடை(குறிப்பில்வழி) விக்கிபீடியா தலைப்புகள்
  2. தமிழ் விக்கிபீடியா தலைப்புகளின் Suggestions மற்றும் தொடுப்புகள்
3. விக்சனரி:
  1. ஆங்கிலம் - தமிழ் விக்சனரி Suggestions மற்றும் தொடுப்புகள்

4. ஆயிரத்தி ஐநூறு தமிழ் இணையதளங்களின் உடனடித் தொடுப்புகள்.
5. மினி தமிழ் செய்தித் தளங்களின் தொடுப்புகள்.
6. மினி தமிழ் மின்னிதழ்களின் தொடுப்புகள்
7. மினி தமிழ் மடலாற்குழுக்களின் தொடுப்புகள்
8. தமிழ் புத்தகத் தேடல்
9. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கருவியை உங்கள் தளத்திலேயே நிறுவிக்கொள்ளும் வசதியாக நிரலி.

இவையனைத்தும் web2.0 எனும் உயரிய இணைய நுட்பத்தில், இலவசமாயும்....

மேலதிக உதவிக்கு "நண்பன்" nanban@techtamil.in என்கிற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

தொடுப்பு: http://techtamil.in

நிரலி (Source Code):


Demo:


Sunday, January 07, 2007

விருபாவிற்கு வாழ்த்துக்கள்

விருபா.காம் தளத்தைப் பற்றி இன்று (7.1.2007) தினமணி கதிரில் இரண்டு பக்க செய்திகள் வந்திருந்தன.

திரு குமரேசன் அவர்கள் ஆரவாரமின்றி செய்து வரும் தமிழ் புத்தகத் தகவல் திரட்டி பற்றி பேட்டியெடுத்து பிரசுரித்திருக்கிறார்கள்.

திரு குமரேசனின் வலைப்பூ: http://viruba.blogspot.com

முழு பேட்டியையும் இந்த வலைப்பூவில் பார்க்கலாம். http://nunippul.blogspot.com