Monday, July 31, 2006

கூகில் கேட்ஜட் - மாதிரி(in தமிழ்)

நம்முடைய சென்ற கூகில் கேட்ஜட் கட்டுரையில் மாதிரி மென்பொருள் கொடுக்கப்படவில்லை. அந்த குறையை தீர்ப்பதற்காக,தமிழ் மொழியில், யுனிகோடை பயன்படுத்தி ஆல்பா வெர்சன் திருக்குர்ஆன் கூகில் கேட்ஜட்டின் மாதிரி.




Sunday, July 30, 2006

கூகில் கேட்ஜட்

அது என்ன கூகில் கேட்ஜட்:

கூகில் டெஸ்க்டாப் தேடுதலின் அங்கமான, டெஸ்க்டாப்களில் இயங்கக்கூடிய லைட்வெயிட் மென்பொருட்களின் தொகுப்புகளே கூகில் கேட்ஜட் ஆகும். அதிகமாக இவை இணையத்தை சார்ந்தே இருக்கின்றன. இணையம் சாராமலும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

உதாரணமாக,

1. இணையம் இல்லாமல் சொடக்கு போன்ற விளையாட்டுகள் (ஜாவாஸ்கிரிப்ட் உதவி கொண்டு உருவாக்கப்படுகின்றன).
2. இணையம் சார்ந்தவையென்றால், கிரிக்கெட் ஸ்கோர் முதல் உங்களுடைய இணையதளத்திலிருந்து நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு கொடுக்க விரும்பும் இணைய சேவைகள்,
3.ஒரிரு வரி சுடச்சுட செய்திகள்,
4.திருக்குறள் வசனம் முதல் சீரிய சிந்தனை வரிகள் வரை.
5. "தமிழ்மணத்தில் இன்று" போன்ற செய்திகள், இப்படி பல....

வாசகர்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் இணையதளங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அவை தானாகவோ அல்லது பட்டன் சொடுக்குவதன் மூலமோ வாசகர்களின் கணிணிக்கே சென்றடைய செய்யலாம்.

உருவாக்கும் விதம்:
Basic:

கூகில் கேட்ஜட் உருவாக்குவது மிகவும் சுலபம். ஐந்தே நிமிடங்களில் சிறிய கேட்ஜட்டை நீங்கள் உருவாக்கிடலாம். தேவை கொஞ்சம் ஜாவாஸ்கிர்ப்ட் அறிவு அத்துடன் asp, php,aspx அறிவு இருந்தால் இன்னும் டேட்டாபேஸ் போன்றவற்றுடன் இணைத்து கொடுக்கலாம். photoshop டிசைனிங்கும் கைகொடுக்கும்.

மற்றவைகளை Gadget Designer உருவாக்கி தந்து விடும். (View.xml என்றொரு ஃபைல் இருக்கும் பார்த்து xml தெரியாதவர்கள் பயந்துவிட வேண்டாம். அவ்வளவு கடினம் இல்லை)

Advanced:

நீங்கள் விரும்பிய ப்ரோக்ராமிங் கருவியை கொண்டே உருவாக்கலாம் உதா. MS Visual Studio 6.0

அஜாக்ஸ் உபயோகிப்பதாய் இருந்தால் கூகில் Google Ajax API தான் உபயோகப்படுத்தவேண்டுமென்றில்லை. கீழே உள்ள கோடிங்கை கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

function fn_ajax(a){
//alert("here")
try{
req=new ActiveXObject("Msxml2.XMLHTTP");
}
catch(e){
try{
req=new ActiveXObject("Microsoft.XMLHTTP");
}
catch(oc){
try{
req = new XMLHttpRequest();
}
catch(oe){
req=null;
}
}
}
//alert(c)
if(!req&&typeof XMLHttpRequest!="undefined"){
req=new XMLHttpRequest();
}
if(req!=null){
//url=" http://yourwebsite/yourfile.asp?q="+a
//url=" http://yourwebsite/yourfile.asp"
//url=" http://yourwebsite/yourfile.php"
url="http://yourwebsite/yourfile.txt"
//alert(url)
req.open("POST",url,true);
req.onreadystatechange=function(){
if(req.readyState ==4){
if(req.status==200){
if(req.responseText!=""){
label_id.innerText=req.responseText ;
}
}
}
req.send(null);
}

}

fn_ajax(a),a-பேராமீட்டரில் உங்களுக்கு தேவையான எண்களையோ குறிச்சொற்களையோ அனுப்பி தேவைப்படும் விவரத்தை டேட்டாபேஸிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

req.responseText என்பது url ல் நீங்கள் கொடுத்த முகவரி ஃபைல் களான yourfile.asp/php/txt லிருந்து response.write, echo அல்லது Text களாக உங்களுக்கு கிடைத்த output.

label_id என்பது நீங்கள் output ஐ பிரிண்ட் செய்யப்போகும் இடம். அதாவது <label id="label_id" />"


கூகில் கேட்ஜட் போட்டி முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ளது. 5000$ வரை பரிசு உண்டு, முயற்சி செய்யுங்கள்.

இணைய முகவரி:http://www.desktop.google.com

ஆறு (கோடி) தமிழர்களும் ஒண்ணா கேக்காங்க "உங்க மென்பொருள் கூகில் கேட்ஜட்டில் எப்போ அரியனை ஏறப்போகுது!?"

Friday, July 28, 2006

ஏமாற்று வேலை (FAJAX)

இந்த வலைப்பூவின் பக்கத்தின் உள் செல்லும் பொழுது அனிமேசனுடன் நன்றாய் இருக்கிறதே. எப்படி?

இது நுண்ணிய மென்மையான நிறுவனத்தின் DirectX நுட்பத்தின் உதவிக் கொண்டு உருவாக்கப்பட்டது. AJAX(Asynchronous Javascript and XML) போன்றே வேகமாக செயல்படுவதால் FAJAX (FAKE AJAX) என்று சொல்லப்படுகிறது (AJAX பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்). இது நுண்ணிய மென்மையான நிறுவன உலாவிகளில் மட்டும் இயங்கக்கூடியது.
 
எவ்வாறு செயல்படுகிறது:
 
இணைய பக்கம் செர்வருக்கு சென்று வரும் போது ஏற்படும் சிமிட்டலை (flicker) குறைக்கிறது. அதாவது IE, இணைய பக்கத்தை படமாக்கி இன்-மெமரியில் சேமித்து வைத்துக்கொள்கிறது, பின்னர் வரும்பொழுது DirectX மூலம் பழையதை எடுத்து Smooth ஆக மற்றொரு படமாக்கி தருகிறது.
 
எவ்வாறு செய்வது:
1. உங்கள் இணைய பக்கத்தின் Source Code ற்கு செல்லுங்கள்.
2. "head" என்பதை தேடுங்கள்.
3. "head" அடுத்தவரியில் கீழே உள்ள வரியை இணையுங்கள்.
4. duration கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.
<meta http-equiv="Page-Exit" content="progid:DXImageTransform.Microsoft.Fade(duration=.5)"/>
<meta http-equiv="Page-Enter" content="progid:DXImageTransform.Microsoft.Fade(duration=.5)"/>

உதவி பக்கம்:
1. http://msdn.microsoft.com/library/default.asp?url=/workshop/author/filter/reference/filters/basicimage.asp 2. http://www.jansfreeware.com/articles/ie-page-transitions.html
குறைபாடு:
 
IE தவிர மற்ற உலாவிகளில் செயல்படாது.
 
 
குறிப்பு: "நுண்ணிய மென்மையான=MICRO SOFT, சரியான  பொருள் தானே. அடிக்க வந்துடாதீங்க...

விகடன் பத்திரிக்கையில் கூகில் விளம்பரம்

இந்த தம்பிக்கு கொஞ்சம் கூட 'sense' இல்ல. கூகிளின் ad sense பத்தி தெரியாது போல என்கிறீரா. அது தான் இல்லை. இணையதளங்களில், எலி சொடுக்குகளின் (mouse clicks) மூலம் சென்ற ஆண்டு 2005 முதல் மூன்று நிதிநிலைக்காலங்களில் (3 financial quarters) மட்டும் கூகில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா $4.2 பில்லியன்கள். இது சென்ற ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும் பொழுது 96% சதவீதம் அதிகமாகும்.



அட வலைப்பூ படைப்புகளை தூக்கிக்கொண்டு எங்கே கிளம்பிட்டீங்க? அச்சகத்திற்கா, இதழ் வெளியிடப் போறீங்களா? வாழ்த்துக்கள்.

அதேசமயம் அவசரப்படாதீங்க, சோதனை ஓட்டமாக நியாயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் டிசம்பர் மாதம் சோதனை ஓட்டத்தில் வெளியிடப்பட்டதன் முடிவு நமக்கு தெரியலீங்கண்ணா. ஹிஹிஹி.

Thursday, July 27, 2006

என்னைப் பற்றி...

என் பெயர் முகம்மது மாஹிர். சென்னையில் நிறுவனம் ஒன்றில் இணைய மென்பொருள் வல்லுநராக (Web Developer) பணியாற்றி வருகிறேன். எனக்கு தெரிந்த இணைய நுட்பங்களை அழகு தமிழில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த ப்ளாக் திறந்திருக்கிறேன்.

இந்த பக்கத்தில் HTML, CSS, Javascript, DHTML, PHP, ASP, ASP.Net, AJAX, ATLAS(Dot Net), MYSQL, SQL Server நுட்பங்களிலிருந்து எளிமையானது முதல் கடினமானது வரை எழுத எண்ணியுள்ளேன்.

மேலும் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களின் செய்திகளும், நுட்பங்களும் கூட எழுதலாமென்றிருக்கிறேன்.

இதை தமிழில் எழுத காரணம் மென்பொருளில் தேர்ச்சிபெறாத/அதைப்பற்றி தெரியாத தமிழ் ஆர்வலர்கள் அதிகம் பயனிக்க தொடங்கியுள்ள நிலையில் இது போன்ற இணைய பக்கங்கள் தொடங்கினால் பயனளிக்குமே என்கிற எண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களை ஆங்கிலத்திலோ தமிழிலோ எனக்கு மின்னஞசலிடலாம் (mahir78[at]gmail[dot].com)