Friday, September 29, 2006

இனி ஜிமெயில்.காம் வேண்டாம்

இனி ஜி-சாட் உபயோகப்படுத்த ஜிமெயில்.காம் மின்னஞ்சல் முகவரி வேண்டியதில்லை. நீங்கள் விரும்பிய மின்னஞ்சல் முகவரியையே பயன்படுத்தலாம். பதிவிறக்கம் செய்ய இங்கு செல்லவும் http://www.google.com/talk/

Monday, September 25, 2006

விளையும் வினை!

குழந்தையும் தொலைக்காட்சியும்:

குழந்தையிடம் தொலைகாட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களின் மொழியாக்கம்.....

1. சாதாரன குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக்காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.

2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக்காட்டிலும் அதிகமாகும்,(தூங்குவதைத்தவிர).

3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்வான்.

4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார்செய்யப்படுகின்றன.

5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதைசம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்கின்றன.

குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:

1. தொலைக்காட்சி மூலை வளர்ச்சியை பாதிக்கிறது.

2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை, அவை விளம்பரநோக்கத்திற்காக தயார் செய்யப்படுகின்றன.

3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது, விளையாடுவது, பழகுவது, வீட்டு பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்முலமாக்குகிறது.

4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்பதினால், பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்தி, சகவாசமின்மை, முரட்டுத்தனம் ஆகிய பின்விளைவுகளை பெறுகின்றன.


வன்முறையும் தொலைக்காட்சியும்:


1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக்காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.

4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன, பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.

5. பள்ளியில் சேருமுன் (pre-school) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது.

6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிக கெட்ட நடத்தைகளை வளர்க்கிறது.

7. நினைப்பதை அடைய, வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.

8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குறியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.

9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.

10. தொலைக்காட்சியில் வரும் உணவு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன, ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.


தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படி தீர்மானிப்பது:

1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது / அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள், அதாவது, வீட்டு பாடம் படிக்கும் முன் / எழுதும் நேரத்திற்கு முன், சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.

2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்காமை.

3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.

4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்

5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம், வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.

6. வீட்டு பாடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர், குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின், பதிவு செய்து, பிறகு காண்பிக்கலாம்.


7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று, இது வீட்டு பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும், குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும், டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையை தூண்டவேண்டும்,

இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைபடுத்தியும் டிவி தொடர்கள் கான்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.


"யாழினிது கேழினிது என்பர் மடையர் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்" என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள், ஆனந்தமடைவீர்கள்.


மேலும் தகவலுக்கு இங்கு செல்லவும்

Labels: ,

Wednesday, September 20, 2006

Restoring Sql server 2000 Database

Here is the steps you can follow to restore your backup database in SQL Server 2000.

Case:

1. you have a backup copy of some database (at D:\MSSQL\MSSQL\BACKUP) and want to restore

2. You want the restore database to set at a physical path on your own ie You want to restore your back up database jobseek.bak to D:\MSSQL\MSSQL\data\jobseek.mdf
if the my above points are correct then follow me.


C:\Program Files\Microsoft SQL Server\MSSQL\Data is the default path for all your SQL Server database (mdf files), You can change the data path as you wish.

To restore:
1. Right click on the "Databases" just below your sql-server. You will find "All Tasks->Restore Database"





2. Put Restore as database with name "JobSeek" or any database name as you want.





3. Select "From device" option

4. Click on "select device"

5. You will get "select restore destination" box ..select your database backup file.




6. click ok twice

7. Click on Options tab (next to General) in "Restore Database" dialog box

8. Change the Logical File name of the database



9. If you don't want to set in a default path for your database mdf file you can change the path here in "move to Physical file name"

10. Some times restore could not be success if you already had the same database deleted and restored. In this case you can try by check box ticked at "force restore over existing database"

Tuesday, September 12, 2006

அஜாக்ஸிலிருந்து அட்லாஸ் வரை.

அஜாக்ஸ்(ajax) என்கிற இணைய நுட்பம் ஏதோ இப்பொழுது தான் வெளிவந்திருப்பதாகவும் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 1998 லிருந்தே XMLHttp என்கிற activex control மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுவிட்டது..
அதன் அவசியத்தை புரிந்து கொண்ட ஷஃபாரி,ஃபயர்பாக்ஸ் , நெட்ஸ்கேப் போன்ற உலாவிகள் உடனே உள்வாங்கிக்கொண்டன.

ஆனால் சமீப காலமாகத்தான் மிகவும் பிரசித்தமானது. அதுவும் மைக்ரோசாப்டிற்கு இணையாக போட்டியில் களம் காணும் கூகிள் நிறுவனத்தின் சில வெளியீடுகள் தான். ஆரம்பத்தில் ஜிமெயில் வெளிவந்த பொழுது பலர் அதன் நுட்பத்தை ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர் அதில் சிலர் கூகிள் hidden frame களை பயன் படுத்துவதாக தெரிவித்தனர்.பிறகு கூகிளின் Google Suggest என்கிற தேடுபொறியின் விசேச பக்கமும் சேர்ந்து கொள்ள சூடு பிடிக்க ஆரம்பித்தது. அத்துடன் கூகிளின் Google Earthம் சேர்ந்து கொண்டது.

ஒரு எழுத்தை (character) textbox இல் இட்டவுடன் அந்த எழுத்தின் தொடக்க வார்த்தைகள் கூகிளின் சர்வரின் இண்டக்ஸில் இருக்கும் பட்சத்தில் குறைந்தது 10 வார்த்தைகளை காண்பிக்கும். இது போன்றவைகளைத் தான் autocomplete எனப்படும்.


Ajax என்கிற Asynchronous Javascript and xml என்று பெயர் சூட்டியவர்கள் Adaptive Path என்கிற நிறுவனத்தினர்.

சரி இப்பொழுது அதன் உபயோகங்களைப் பற்றி பார்போம். நீங்கள் உங்கள் தளத்தில் வாசகர்கள் உள்ளே நுழைய username, password கொடுக்கவேண்டி ஒரு login பக்கம் அமைக்கிறீர்கள். அதில் சரியான username, password கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று சர்வரில் உள்ள டேட்டாபேஸில் தேடவேண்டும். சரியாய் இருக்கும் பட்சத்தில் உள்ளே நுழைய அனுமதிக்கவேண்டும் இல்லையெனில் "username or password does not exist" என்கிற செய்தியை உலாவியில் தெரிவிக்கவேண்டும்.

ajax உபயோகிக்காத பட்சத்தில் என்ன செய்வீர்கள் form tag ல் உள்ள action attribute ல் asp/php பாதை கொடுத்து சரியாய் இருக்கிறதா என்று பார்ப்போம். தவறான உள்ளீடாய் இருக்கும் பட்சத்தில் இந்த லாகின் பக்கம் முழுவதும் சர்வரிலிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டியுள்ளது.

அதாவது இரண்டு முறை சர்வரின் லோடு(server round trip) அதிகமாகிறது.
username, password ஆகிய இரண்டு மட்டும் தான் சோதனை செய்யவேண்டும் ஆகையால் இந்த இரண்டின் உள்ளீடுகளை மட்டும் அனுப்பி ஏன் சரிபார்க்கக்கூடாது. இதற்கு தான் அஜாக்ஸ் உபயோகமாய் இருக்கிறது.

இது ஒரு சிறு உதாரணம் தான். சர்வரில் சரிபார்த்தலுக்கு மட்டும்தான் என்றில்லை,
டேட்டாபேஸிலிருந்து மெனு போன்றவை, உடனுக்குடனான முகவரிகள், அதுபோல் எவ்வளவு பெரிய (sql query) கொரியானாலும் அதன் ரிசல்ட். இன்னும் பல. அஜாக்ஸில் ஒரு விசேசம் என்னவென்றால் நீங்கள் html கோப்பிலிருந்தே டேட்டாபேஸின் தகவலை பிரிண்ட் செய்யமுடியும் என்பது தான்.

சரி html லிருந்து சர்வருக்கு எப்படி உள்ளீடுகளை அனுப்புவது?

querystring வழியாகத்தான்.. அதாவது http://www.yourwebsite.com/validateuser.asp?
uid=username&pwd=password, இங்கு validateuser கோப்பில் மேலேஉள்ள credentials கொண்டு சரிபார்க்கவேண்டும். சரியாகும் பட்சத்தில் அதற்குண்டான operations நடக்கும் அத்துடன் response/echo போன்றவை மூலம் பிரிண்ட் செய்யவும். தவறாகும் பட்சத்தில் தவறு என்று எழுதலாம். பின்னர் அவைகளை client scripts வாங்கி உலாவியில் காண்பிக்கும்.

இறைவன் நாடினால் அடுத்த பதிவில் தொடரும்...

Sunday, September 10, 2006

சென்னையில் நடைபெற்ற வலைப்பூ கருத்தரங்கு



இந்திய அளவிலான வலைப்பூ எழுத்தாளர்கள் ஒன்றினையும் நிகழ்ச்சி India's Biggest Blog Unconference சென்னையில் டைடல் பூங்காவில் சனி, ஞாயிறு 9,10 இரண்டு நாட்கள் நடைபெற்றது.


இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கலந்து கொண்டு கிரிக்கெட் சம்பந்தமான podcasting, audiocasting, போன்றவைகள் மூலம் நேரடியாக ஒலிபரப்புவது பற்றி விளக்கினார்.

முக்கிய விளம்பரதாரர்களாக யாகூ, ford, ஜோஹோ, நோக்கியா, இண்டெல் போன்றவர்கள் பங்கெடுத்தனர். நேற்று இரவுதான் இதுபற்றிய செய்தி ஒன்று தமிழ்மணத்தில் வந்தது.

இன்றைய ஹைலைட்:

1. கோலாவின் போட்டோ ஒன்றை ப்ளாக் செய்ததால் கோலா கம்பெனி 20 லட்ச ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பற்றியும், பின்னர் அதனை சக ப்ளாக்கர்கள் வழியாக பத்திரிக்கைகள், தொலைகாட்சிகளை அனுகியது பின்னர் மூன்றே நாளில் உலகம் முழுவதும் செய்தி பரவச்செய்ததைப் பற்றி ஒருவர் விளக்கினார்.

2. blogcamp ன் முக்கிய அமைப்பாளரான க்ருபா ஷங்கர் முன்பு எழுதிய ஒரு பதிவில் ஐ.சி.ஐ.சி.ஐ.ன் ஏடிஎம் ன் செக்யூரிடி குறைபாடுபற்றி எழுத பின்னர் மிரட்டல் வந்தது பற்றி விளக்கினார்.

3. இந்தியாவில் பாட புத்தகங்கள் அரசியல் ரீதியாக எழுதப்படுவதால் நேர்மையற்றவையாக இருப்பதால், காப்பிரைட் போன்ற பிரச்சினைகளினால் புத்தக விலை அதிகமாவதால்,நேர்மையாகவும் புத்தகங்கள் மலிவாக கிடைக்க
open source எனப்படும் க்னூ முறையில் புத்தகங்கள் வெளியிடுவது போன்ற ஆலோசனை வழங்கப்பட்டது.

4. பங்களாதேஷ் ப்ளாக்களுக்கு அதிகம் கிராக்கி இருப்பதாக உரையாற்றிய
Aparna Ray , உலகில் பங்காளிகள்,கனடா மக்கள் அதிக (மாணவர்கள்) விக்கிபீடியா பயன்படுத்துவதாக தெரிவித்தார். அதேசமயம் பங்காளியில் ப்ளாக் எழுதுவது எழுத்துருக்கள் தொடர்பான பிரச்சினைகளால் வளராமல் உள்ளதாகவும் அதற்கு தீர்வு யுனிகோட் என்கிற மிகப்பெரிய்ய்ய உண்மையை கூறிவிட்டுச்சென்றார். அதற்கு (சென்னையில் உள்ள தமிழர்கள்) உதவ கேட்டுக்கொண்டார். (Unicode - சபாஷ் தமிழர்கள்)

5.
common creative licence பற்றி விவாதிக்கப்பட்டது. common creative licence ன் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை, படத்தை பிறர் திருடினால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள், அதற்கான ஒரு அமைப்பு இந்தியாவில் இன்னும் இல்லாமை போன்ற குறைகள் பற்றி அலசப்பட்டது.

6. audio casting எனப்படும் வலைப்பூக்களில் ஒலிஒலி பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டது.

7. branding எனப்படும் வலைப்பூவின் கட்டுரைகள், கோப்புகளை தரப்படுத்துதலின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.

8. (இன்று) கலந்து கொண்டவர்களில் பத்திற்குள் தான் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். அதிலும் 30 வயதிற்கு கீழுள்ளவர்கள் 60 சதவீதம் இருக்கும்.

9. வலைப்பூக்களும் மீடியா வகையை சார்ந்தது என்றும் வலைப்பதிவர்கள் பொதுப்பிரச்சினைகளை எழுதும்பொழுது ஆதாரங்களை அவசியம் வைத்திருக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கப்பட்டது. (அட! என்னங்க, நாற்பதிற்கும் மேற்பட்ட ஒருவர் தானுங்க அந்த அறிவுரை வழங்கினார்). Freedom of Expression என்பது நாட்டின் இறையாண்மையை கருத்தில் கொள்ள வேண்டுமென்றும் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை தாண்டுவது தவறு என்று அறிவுறுத்தப்பட்டது.
மென்பொருள் வேலையை விட்டுவிட்டு ஒருவர் வலைப்பூ எழுதுகிறார் என்கிற செய்தி கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன் ஹிந்து பத்திரிக்கையில் படித்த நான் இன்று ஆக்ராவிலிருந்து விருந்தினராக கலந்து கொண்ட அமித் அஹர்வாலை சந்தித்து நுட்பங்கள் பற்றி சிறிது பேசினேன்.

புகழ்ப்பெற்ற தமிழ்மணம் என்கிற வலைப்பூ திரட்டியில் இதுவரை 1100 வலைப்பூக்கள் உள்ள நிலையில் தமிழ் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எத்தனை தமிழ் வலைப்பதிவர்கள் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

Monday, September 04, 2006

முதலை ஆர்வலர் இர்வின் மரணம்

திகிலை ஏற்படுத்தும் முதலைகளை கொஞ்சி குழாவும் அவருடைய காட்சிகளை சிறு குழந்தைகள் மட்டுமின்றி (தொலைக்காட்சியில் விலங்கினங்களின் சானல்கள் பார்க்கும்) அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவரான ஆஸ்ட்ரேலியாவைச் சார்ந்த ஸ்டீவ் இர்வின் இன்று (03.09.2006) தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு டாகுமெண்டரி எடுக்கும்பொழுது stingrays எனப்படும் ஒருவகை மீனினத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார்.

அவருக்கு இரு குழந்தைகள், மனைவி உண்டு. அவரைப்போலவே, அவருடைய மனைவியும் முதலைகளை பராமரிப்பவர். ஸ்டீவ் இர்வினுடைய தந்தையும் தாயும் கற்றுக்கொடுத்ததுதான் இந்த முதலை விளையாட்டும் பராமரிப்பும். 8 வயதிலே களத்தில் இறங்கியிருந்திருக்கிறார். 44 வயதில் இறந்த அவர் வெளியுலகிற்கு அறிமுகமானது அவருடைய நண்பர் 1990ல் எடுத்த வீடியோ கோப்புகள் மூலமே.

ஆஸ்ட்ரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசித்துவந்த அவர் அங்குள்ள முதலைப்பண்ணையில் பணியாற்றினார்.

தலைவர்களின் அஞ்சலி:

பிரதமர் ஜான் ஹோவர்ட், மிகுந்த அதிர்ச்சியும் அடைந்ததாகவும், இலட்சக்கணக்கானோருக்கு உற்சாகத்தைக் கொடுத்த அவர் ஆஸ்திரேலியர்களில் வித்தியாசமானவர், நல்குணங்களை கொண்டிருந்த அவரின் இழப்பு ஆஸ்திரேலியாவிற்கு பேரிழப்பாகும் என்று அஞ்சலியும், புகழாரமும் சூட்டியுள்ளார்

சென்ற கிருஸ்த்துமஸில் ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்காவில் அவருடன் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் அலக்சாண்டர் டவ்னர் கூறுகையில், "இர்வினின் உழைப்பு வெளிநாட்டவர்களின் வருகையை அதிகரிக்கச்செய்ததாக தெரிவித்தார்".

அவருடைய மரணம் ஆஸ்திரேலிய சுற்றுலாத்துரையின் வளர்ச்சியில் பின்னடைவு என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எப்படி இறந்தார்?

stingrays


படத்தில் உள்ள உயிரனமான இவைதான் இர்வினை தாக்கியது. நெஞ்சில் துளையிட்டு இதயத்தை குத்தியது. பொதுவாக stingrays கள் தானாக தாக்குவதில்லை, தற்காப்புக்குத்தான் தாக்குகின்றன என ஒரு ஆராய்ச்சி தளம் தெரிவிக்கிறது.

stingrays களின் குடும்ப வகைகளின் படங்கள்:



(அட நம்ம ஊர்களில் "திருக்க(திருக்கை?) மீன்" என்று சொல்வோமே அந்த வகை தானோ இது?,)



அதைரியசாலி, விலங்கியல் ஆர்வலரான அவருடைய துரதிருஷ்ட மரணம் நம் நெஞ்சையும் துளைக்கிறதுதானே?



News from AOL

Friday, September 01, 2006

Are You a New Web Programmer?

If you are completely new to web development, this page provides the learning materials necessary for you to begin Web development with ASP.NET. You'll find the resources that will help you get your first Web application built quickly, and more.

Good Resource from Microsoft site with Video tutorials, coding in VB.Net, C# ....Catch it & enjoy learning Microsoft Dot Net Technology.

http://msdn.microsoft.com/asp.net/learning
/learn/newtodevelopment/default.aspx


You can also download Microsoft One year licenced Visual Web Developer IDE tool to learn and develop web sites.